செல்போன் கோபுரம் அமைப்பதாக கூறியதை நம்பி பணத்தை பறிகொடுத்த நபரிடம் தொகை ஒப்படைக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கொடூர் கிராமத்தில் அய்யாத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலசுப்பிரமணியன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பாலசுப்பிரமணியனின் செல்போனுக்கு கடந்த மாதம் 16-ந் தேதியன்று குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்க நிலம் தேவை என்று இருந்தது. இதனை பார்த்த பாலசுப்பிரமணியன் இதுகுறித்த விவரம் கேட்பதற்காக அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது எதிர்முனையில் பேசிய […]
