விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் கீழ்பாக்கம் கல்லூரி சாலை மற்றும் கல்லூரி நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, “விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அரசு கலைக் கல்லூரிக்கும், கல்லூரி சாலைக்கும் இடையே தனிநபர் ஒருவருக்கு சொந்தமான காலிமனை அமைந்துள்ளது. அந்த காலி மனையில் தனியார் செல்போன் நிறுவனம் ஒன்று செல்போன் கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டு […]
