செல்போன் உதிரிபாகங்களை திருடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி டவுன் கேசவன் தெருவில் தீப்சிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆரணி காந்தி சாலையில் உள்ள பி.ஜி.எம். காம்ப்ளக்ஸில் செல்போன் பழுது பார்க்கும் மற்றும் அதன் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகின்றார். கடந்த 8-ஆம் தேதி தீப்சிங் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலையில் தீப்சிங் கடையை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு […]
