கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தர்ஷன். இவர் அண்மையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அதிர்ஷ்ட தேவதை குறித்து சர்ச்சையான கருத்தை கூறியுள்ளார். இதனால் தர்ஷன் தான் கூறிய சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பலரும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தர்ஷன் நடித்துள்ள கிராந்தி என்ற திரைப்படம் அடுத்த வருடம் ஜனவரி 26-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா விஜயநகர் மாவட்டம் ஒசப்பேட்டை பகுதியில் நடைபெற்றது. […]
