கிரகணத்தில் செய்யக்கூடியவை சந்திர கிரகணம் ஆரம்பிக்கும் முன்பும் முடிந்த பின்பும் கண்டிப்பாக குளிக்க வேண்டும். கிரகணம் ஆரம்பிப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே உணவை உட்கொள்ள வேண்டும். சந்திர கிரகணம் முடிந்த பிறகு வீட்டை நன்றாக கழுவி சுத்தம் செய்து தீபமேற்றி இறைவனை வழிபட வேண்டும். கிரகணம் நிகழும் நேரத்தில் குருவின் உபதேசம் கேட்பது, தெய்வங்களை வழிபடுவது, வேதங்களை படிப்பது, ஆன்மீக புத்தகங்களை படிப்பது போன்றவற்றை செய்வதன் மூலம் இறைவனின் அருளை பல மடங்கு கிடைக்கச் செய்யலாம். […]
