பீகார் முன்னாள் முதல்வரின் செய்தி தொடர்பாளரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக பழங்குடியின பெண் புகார் அளித்துள்ளார். பீகார் முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சியின் செய்தித் தொடர்பாளர் டேனிஷ் ரிஸ்வான் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். தனது பிள்ளைகளின் தந்தை டேனிஷ் ரிஸ்வான் எனவும் புகாரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. புகாரின் பேரில் பாட்னாவில் உள்ள தலைமைச் செயலக காவல் நிலையம் எஃப்ஐஆர் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. […]
