சுதந்திர தினத்தை முன்னிட்டு வருடம் தோறும் நடைபெறும் கல்லூரி மற்றும் பள்ளி நிகழ்ச்சிகள் இந்த வருடம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று 75-ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது, சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைமைச் செயலக கோட்டையான கொத்தளத்தில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை அன்று தேசியக் கொடியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்றி வைக்க இருக்கிறார். […]
