கொரோனா தொற்று கட்டுப்பாடு காரணமாக எக்ஸ்பிரஸ் ரயில்கள் சிறப்பு ரயில்களாக கூடுதல் கட்டணத்துடன் இயக்கப்பட்டது. மேலும் அனைத்து பெட்டிகளுமே முன் பதிவு பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து பாசஞ்சர் ரயில்கள் மற்றும் இணைப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக ரயில்வேதுறை பயணிகளிடம் அதிகமான கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் நலச் சங்கங்கள் தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டது. இந்நிலையில் மதுரை கோட்டத்தில் ஒரு சில பாசஞ்சர் ரயில்களை எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் மீண்டுமாக இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது. […]
