சிறுமியிடம் நகையை பறித்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவிளந்தூர் ராதாநல்லூர் தெருவில் தினேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 7 வயது உடைய அபிக்ஷா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் தினேஷ்குமார் தனது மகளுடன் தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் மாமனார் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் அரசு பேருந்தில் மயிலாடுதுறைக்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை சாலை பேருந்து நிறுத்தத்தில் அபிக்ஷாவை கையில் பிடித்துக் கொண்டு தினேஷ்குமார் இறங்கியுள்ளார். […]
