சென்னை பல்லாவரத்தில் பட்டப்பகலில் வீட்டு வாசலில் கர்ப்பிணிப் பெண்ணை கீழே தள்ளிவிட்டு செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜமீன் பல்லாவரம் ரேணுகா நகரை சேர்ந்த கீதா என்பவர் தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவர் இரு தினங்களுக்கு முன் தன் வீட்டு வாசலில் நின்று கொண்டு இருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரில் ஒருவன் கீதாவின் கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்றான். ஆனால் கீதா தாலி செயினை இறுக்கமாக […]
