திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் வீரபாண்டி ராஜா மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சேலத்தில் சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் வீரபாண்டி ராஜா மாரடைப்பின் காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார். இன்று அவரது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் திடீரென உயிரிழந்தது திமுகவிற்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சேலம் மண்டலத்தில் கழகம் வளர்க்கும் வீரனாக வளர்ந்த அருமை சகோதர வீரபாண்டி ராஜா அவர்கள் […]
