தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களின் நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருக்கிறது. இந்நிலையில் பல்கலைக்கழக துணை வேந்தர்களே மாநில அரசு நியமிக்கும் சட்ட மசோதா சட்டப்பேரவில் தாக்கல் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் துணைவேந்தர்களை இனி ஆளுநருக்கு பதில் தமிழக அரசே நியமிக்கும். இதுவரை ஆளுநரின் அதிகாரத்திற்கு கீழ் இருந்த துணைவேந்தர்கள் நியமனம் இனி மாநில அரசு நேரடி அதிகாரத்திற்கு வரும். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியால் தாக்கல் செய்யப்பட்டு சட்டப்பேரவில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. […]
