பள்ளிகொண்டா அருகில் செம்மரம் வெட்டுவதற்காக வந்தவர்கள் போலீசாரை பார்த்ததும் காரை நிறுத்தி விட்டு தப்பித்து சென்றனர். வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா காவல் நிலையத்திற்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ஆம்பூரில் இருந்து வேலூரை நோக்கி கார் ஒன்று அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது அந்தக் காரை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் நிறுத்த முயன்றபோது நிற்காமல் வேகமாக சென்றது. உடனே காவல்துறையினர் அந்த காரை பின்தொடர்ந்து விரட்டி சென்று பள்ளிகொண்டா அடுத்த சின்னசேரி […]
