அனுமதி இல்லாமல் செம்மண் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்ததோடு டிராக்டரை பறிமுதல் செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள மாங்குடி பகுதியில் உள்ள கண்மாயில் இருந்து அனுமதி இல்லாமல் செம்மண் கடத்தப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல் துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற டிராக்டரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதில் அனுமதி இல்லாமல் செம்மண் கடத்திச் சென்றது தெரியவந்ததுள்ளது. அதன் பிறகு காவல்துறையினர் டிராக்டர் டிரைவரிடம் […]
