சென்னையில் தொடர் கனமழை காரணமாக செம்மஞ்சேரி சுனாமி நகர் குடியிருப்பு பகுதியை மழை வெள்ளம் சூழ்ந்தது. சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்நிலையில் சோலிங்கநல்லூர் 15வது மண்டலம் செம்மஞ்சேரி சுனாமி நகர் குடியிருப்பு பகுதியை கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் இந்த பகுதி முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்து குளம் போல் காட்சியளிக்கிறது .சாலையில் சுமாராக இரண்டு அடிக்கு மேல் மழைநீர் சூழ்ந்துள்ளதால் இங்கு வசிக்கும் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் […]
