உலகில் நடக்கும் யுத்தம் மற்றும் இயற்கை சீற்றங்களினால் பாதிக்கப்படுபவர்களுக்கு மனிதாபிமான நோக்கத்தில் நிவாரண பணிகளை செய்யும் முகமாக செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை சங்கம் சர்வதேச அளவில் அமைக்கப்பட்டுள்ளது. செம்பிறை சங்கம் செஞ்சிலுவை சங்கம் என பெயரில் வித்தியாசத்தை கொண்டிருந்தாலும் இரண்டு அமைப்புகளும் ஒரே நோக்கத்தை முன்வைத்து செயல்படும். அரபுநாடுகளில் சிலுவை என்ற குறியீடுக்கும் வார்த்தைக்கும் மாறாக பிறை என்ற குறியீடும் வார்த்தையும் பயன்படுத்துகின்றனர். உலகம் முழுவதும் 178 தேசிய கிளைகள் கொண்ட இந்த அமைப்பு மனிதாபிமான […]
