வேளாண் துறை அலுவலகத்தில் கழிவறை இல்லாததால் பக்கத்து வீட்டிற்கு சென்ற இளம்பெண் செப்டிக் டேங்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூர் பகுதியில் அரசு. வேளாண்மை விரிவாக்க மையம் உள்ளது. இதில் இளநிலை ஆளுநராக சரண்யா என்பவர் பணிபுரிந்து வருகிறார். வேளாண்மை விரிவாக்க மையத்தில் கழிவறை வசதி இல்லாததால் அருகில் உள்ள வீட்டிற்கு சென்று இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார். தொடர் மழையின் காரணமாக பகுதி முழுவதும் மழைநீர் தேங்கி இருந்தது. […]
