சென்னையில் இன்று 2,182 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 60,533 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.. இந்நிலையில் இன்று தமிழகத்தில் 30, 571 பேருக்கு பரிசோதனை செய்ததில் 3,882 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 90,167 ல் இருந்து 94,049 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று ஒரே நாளில் கொரோனாவால் 63 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் […]
