சென்னையில் போதைப் பழக்கத்துக்கு அடிமை ஆகி கஞ்சா விற்பனையாளராக மாறிய ஆயுதப்படை காவலர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை தலைமை செயலகம் அருகில் உள்ள அன்னை சத்யா நகர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த இளைஞர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் ஆயுதப்படை காவலர் அருண் பிரசாத் என்பவர் கஞ்சா விற்றதாக திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது. தர்மபுரியை சேர்ந்த காவலர் அருண்பிரசாத், […]
