கொரோனாவால் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 315 மாணவர்கள் படிப்பை பாதியில் கைவிட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. அதன்படி தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கிறது. அதனால் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் […]
