Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரயிலில் இரண்டு சக்கர வாகனமா….? இத பண்ணிட்டு அப்புறம் ஏத்துங்க… விதிக்கப்பட்ட புதிய வழிமுறைகள்…!!

இரு சக்கர வாகனங்களை ரயிலில் அனுப்புவது குறித்த புதிய வழிமுறைகளை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.  தென்னக ரயில்வே துறையானது இருசக்கர வாகனங்களை ரயில்கள் மூலம் அனுப்புவதற்கான புதிய விதிமுறையை அறிவித்துள்ளது. மேலும் இதற்காக சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரு சக்கர வாகனங்களின் பெட்ரோல் டேங்குகளில் இருக்கும் மொத்த பெட்ரோலையும் முதலில் நீக்க வேண்டும். அதன் பிறகு வாகனங்களை இயக்கி டேங்கில் பெட்ரோல் ஒரு துளி கூட இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாஸ்டர் படத்தால் நடந்த கொடூரம் – தமிழகத்தில் அரங்கேறிய பரபரப்பு சம்பவம் …!!

பொங்கல் பண்டிகைக்கு நீண்டநாள் எதிர்பார்ப்புக்கு பிறகு நடிகர் விஜய் – விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இந்தப் படத்தை விஜய்யின் ரசிகர்கள் கொண்டாடினர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு பல தரப்புகளில் இருந்து வரவேற்பு குவிந்து வருகிறது. படத்தின் தொடக்க நாளில் கொரோனா இருந்தும் கூட ரசிகர்கள் அனைவரும் திரையரங்குகளில் முண்டியடித்துக்கொண்டு டிக்கெட் வாங்கி படத்தை கண்டுகளித்தனர். இந்த நிலையில் தற்போது ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது சென்னை நெற்குன்றத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் தபால் ஓட்டு…! 12 ,98, 406 பேர் இருக்காங்க…! கொரோனவால் அதிரடி முடிவு …!!

2021 ன் சட்டசபை தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் இந்த வருடம் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. இதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டின் தேர்தல் அலுவலரான சத்யபிரதா சாகு, தேர்தலுக்கான இறுதி வாக்காளர்  பட்டியலை இன்று வெளியிட்டுள்ளார். அதில் 13, 09, 311 நபர்கள் முதன்முதலாக வாக்களிக்கவுள்ளார்கள். மேலும் கொரோனா தாக்கத்தினால் 80 வயதுக்கு மேற்பட்ட குடிமக்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் வரும் சட்டப்பேரவை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பாஜகவின் கீழ்தான் அதிமுக…. சசிகலா வந்ததும் எல்லாரும் ஓடிருவாங்க – கார்த்திக் சிதம்பரம்

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் அதிமுக பாஜகவின் கீழ் தான் செயல்பட்டு வருகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.  சென்னை குரோம்பேட்டையில், மாவட்டத் தலைவர் செந்தில்குமார் தலைமையில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் செயல்வீரர்களின் கூட்டமானது நேற்று தனியார் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மற்றும் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணுபிரசாத் போன்றோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று உரையாற்றியுள்ளனர். அதன்பிறகு கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அதில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தலைமுடியை வெட்டிட்டு வா”… தற்கொலை செய்துகொண்ட +2 மாணவன்… செல்போனை கைப்பற்றியதில் தெரியவந்த உண்மை.!!

சென்னையில் ஆசிரியர் மாணவரை முடிவெட்டி வரச் சொன்னதால் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, அரும்பாக்கம் விநாயகம் பகுதியை சேர்ந்த சஞ்சய் குமார் என்பவர் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் கடந்த 10 மாதங்களாக வீட்டிலேயே இருந்ததால் ஆசையாக முடி வளர்த்துள்ளார். இப்போது பள்ளிகள் திறந்து உள்ள காரணத்தினால் சஞ்சயை அவரது ஆசிரியர் தலைமுடியை வெட்டி வர சொல்லி இருக்கிறார். அதன்பின் பள்ளி முடிந்து […]

Categories
மாநில செய்திகள்

வியாபாரிகளே இல்லாமல் தேர்வு…. ஸ்மார்ட் கடைகள் யாருக்கு…? – வியாபாரிகள் ஆதங்கம்…!!

வியாபாரிகள் இல்லாமலே ஸ்மார்ட் கடைகள் அமைக்க குலுக்கல் நடத்தியதால் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மெரினா கடற்கரையை அழகாக காட்சி படுத்தும் விதமாக சென்னை மாநகராட்சி சார்பாக கடற்கரை பகுதியில் ஸ்மார்ட் கடைகள் அமைக்கும் திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து ஏற்கனவே மெரினா கடற்கரையில் வியாபாரம் செய்துவந்த வியாபாரிகளுக்கு 60 சதவீத ஒதுக்கீடு அடிப்படையில் 540 கடைகளும், புதிதாக வியாபாரம் செய்ய விரும்புபவர்களுக்கு 370 கடைகளும் என்று மொத்தமாக 900 கடைகள் அமைக்கலாம் என்று மாநகராட்சி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதுவரை 135 குழந்தைகள் மீட்பு… சென்னையில் அதிரடி நடவடிக்கை…!

சென்னையில் சிக்னல்களில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை மீட்கும் பணியில் குழந்தை நல பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை சாலைகளில் உள்ள சிக்னல்களில் அருகில் குழந்தைகளும் தாய்மார்களும் பிச்சை எடுப்பதை நாம் கண்டுள்ளோம். அவர்களில் சிலர் தங்களது குடும்ப வறுமையினால் பிச்சை எடுக்கின்றனர். ஆனால் சில கும்பல்கள் குழந்தைகளை வலுக்கட்டாயமாக பிச்சை எடுக்க வைத்து பணம் சம்பாதித்து வருகிறது. இந்நிலையில் இதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை குழந்தைகள் நல பாதுகாப்பு பிரிவு மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆண்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பாலியல் பலாத்கார முயற்சி… “கன்னத்தைக் கடித்து குதறிய ஊழியர்”… போலீசில் பரபரப்பு புகார்..!!

சென்னையில் பக்கத்து வீட்டுக்காரர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்து, அவரின் கன்னத்தை கடித்து குதறிய ஊழியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை அமைந்தகரை முத்து இருளாண்டி காலனியை சேர்ந்த மின்சார வாரிய ஊழியர் மீது பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் ஒருவர் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். பக்கத்து வீட்டை சேர்ந்த ஊழியருக்கு 50 வயதாகும். அவருக்கு மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். போதைக்கு அடிமையான அவர் என் மீது ஆசை கொண்டார்.  […]

Categories
மாநில செய்திகள்

இனி இது பொது நல வழக்கு அல்ல… உயர் நீதிமன்றம் போட்ட உத்தரவு…!

தனிநபர் அழிக்கும் புகார்களை பொதுநல வழக்காக கருத முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் சண்முகம் என்பவர் அரசு நிலம் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அதன்பின் இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் தெரிவித்ததாவது, அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்வதை அனுமதிக்க முடியாது. இதில் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் மனு அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீ முதல்வர் ஆகவே முடியாது… உங்களை கட்டாயம் வெளியேற்றுவோம்… பன்னீர்செல்வம் அதிரடி…!

எக்காலத்திலும் ஸ்டாலின் முதல்வர் ஆகவே முடியாது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை கண்ணகி நகரில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அதில் கலந்து கொண்ட தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்பின் அவர் பொதுமக்களிடம் பேசியதாவது, அதிமுகவில் யாரும் ரவுடித்தனம், அடாவடித்தனம் போன்ற தவறான செயல்களில் ஈடுபடுவதில்லை. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் எங்களது கட்சியை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாத இரும்புக் கோட்டையாக உருவாக்கி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் மட்டும் 40 லட்சத்துக்கு மேல் வாக்காளர்கள்…!!!

சென்னையில் மட்டும் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மிக விரைவில் நடைபெற உள்ளது. அதற்கான முன் ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து கொண்டிருக்கிறது. அதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, ஒரு தொகுதியிலிருந்து வேறு தொகுதிக்கு இடம்பெயர்தல்,முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அப்போது நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

Breaking: கண்கள் நோண்டி எடுப்பு… மெரினாவில் பெரும் பரபரப்பு…!!!

சென்னை மெரினா கடற்கரையில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரின் இரண்டு கண்களை நோண்டி எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக சுற்றுலா தலங்களில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. கடந்த 8 மாதங்களுக்கு மேலாக சுற்றுலா பயணிகள் செல்வதற்கே மெரினா கடற்கரையில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கடந்த […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்… “சென்னையில் பரவும் டெங்கு”… கவனமா இருங்க..!!

சென்னையில் தற்போது இரண்டு பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியாகியுள்ளது. தமிழகத்திலேயே சென்னையில்தான் அதிக அளவில் கொரோனா பரவல் இருந்தது. இதனை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு கட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வந்தது. தற்போது தான் கொரோனா பரவல் குறைய தொடங்கியுள்ளது. இதனால் சென்னை வாசிகள் சற்று நிம்மதியுடன் வெளியில் சென்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இன்று சென்னை கோடம்ப்பாக்கம், டிரஸ்ட் புரம் பகுதியில் இருவருக்கு டெங்கு காய்ச்சல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இன்று முதல் அமல்… வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி செய்தி…!!!

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட வந்தது. அதன் பிறகு ஜூன் மாதம் முதல் விலை அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை 80 ரூபாயை தாண்டியுள்ளது […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை… இதை புகாராக பாக்காதீங்க… ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு…!!

குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் விண்ணப்பங்கள் எதுவும் புகார்கள் அல்ல என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவுறுத்தியுள்ளார். கடந்த 2005 ஆம் ஆண்டு தேசிய சர்வதேச பெண்கள் அமைப்புகள் மற்றும் தேசிய மகளிர் ஆணையம் முயற்சியால் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டு 2006 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இச்சட்டத்தின்படி, வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள், இழப்பீடு, வசிப்புரிமை, பாதுகாப்பு கோரி மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் விண்ணப்பிக்கலாம். இந்நிலையில் நீதிமன்றத்தில் இச்சட்டப்பிரிவில் உள்ள விண்ணப்பங்கள் ரத்து […]

Categories
கல்வி சென்னை மாவட்ட செய்திகள்

70% OK ஆகிட்டு…! சென்னையில் நாளை முதல்….வெளியான புது அறிவிப்பு …!!

சென்னையில் நாளை 70 பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என மாநகராட்சி அலுவலர் தெரிவித்துள்ளார். தமிழக அரசு வரும் 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தது. மாணவர்கள் பெற்றோரின் எழுத்துப்பூர்வமான அனுமதி கடிதத்தைப் பெற்று தான் பள்ளிக்கு வரவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நாளை சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் 38 உயர்நிலைப் பள்ளிகளும், 32 மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதுகுறித்து செய்தியாளரிடம் பேசிய கல்வி அலுவலர் முனியன் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: சென்னையில் 4 நாட்களுக்கு தடை – அதிரடி அறிவிப்பு…!!

சென்னையில் குடியரசு தினத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் ஜனவரி 20, 22, 24, 26 ஆம் தேதி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நான்கு நாட்களிலும் 6 – 10 மணி வரை காமராஜர் சாலையில் கலங்கரை விளக்கம் முதல் போர் நினைவுச் சின்னம் வரை வாகனம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்ணா சதுக்கம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம், வஜாலா சாலை விருந்தினர் மாளிகை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எந்த கட்சியிலும் சேர்ந்துகோங்க…. இங்க ராஜினாமா பண்ணனும்…. ரஜினி மக்கள் மன்றம் வெளியிட்ட அறிக்கை….!!

ரஜினி மக்கள் மன்றத்தை சார்ந்தவர்கள் எந்த கட்சியிலும் இணையலாம் என அம்மன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் இணைந்து செயல்பட விரும்பினால் ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியிலும் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம். அவர்கள் வேறு கட்சியில் இணைந்தாலும் அவர்கள் எப்போதும் நம் அன்பு தலைவரின் ரசிகர்கள் தான் என்பதை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தீவிரம் எடுக்கும் பறவை காய்ச்சல்… இறைச்சி கடைகளுக்கு கடும் எச்சரிக்கை…!!!

இறந்த பறவைகள் மற்றும் நோய்வாய்ப்பட்ட பறவைகளின் இறைச்சியை எக்காரணம் கொண்டும் விற்பனை செய்யக் கூடாது என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. பறவைக்காய்ச்சலை கட்டுப்படுத்தும் நோக்கில், பல்வேறு கட்டுப்பாட்டு நெறிமுறைகளை வகுத்து சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இது தொடர்பாக சென்னை பெருநகர ஆணையாளர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, “இறைச்சிக் கடைகளில் ஒரே நேரத்தில் 3-க்கும் மேற்பட்ட பறவைகள் திடீரென இறக்கும் பட்சத்தில் உடனடியாக கோட்ட சுகாதார ஆய்வாளருக்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், கடைகளில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களே! இனி பைக்கில் செல்ல – அதிரடி அறிவிப்பு…!!

சென்னையில் இ-பைக் சேவை பயன்பாட்டிற்கு வர உள்ளதாக அதிரடி அறிவிய்ப்பு வெளியாகி உள்ளது. சென்னையில் இ-பைக் சேவை பயன்பாட்டிற்கு வர உள்ளது. இந்த பைக்கில் செல்ல முதல் பத்து நிமிடத்திற்கு ரூபாய் 10 கட்டணம் வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அடுத்த ஒவ்வொரு நிமிடத்திற்கும் ரூ.1 கட்டணமாக வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த சேவைக்கு 3 மாத பயண அட்டை, ஒரு நாள் பயண அட்டை, ஒரு மாத பயண அட்டைகளும் வழங்கப்படும் என […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ப்ளீஸ்… அரசியல் வேண்டாம்…! ”பிரதமர் மோடிக்கு நன்றி”… யாரும் பயப்படாதீங்க…!

தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருக்கும் அவரது இல்லத்திற்கு வந்துள்ளார். அங்கு அவர் உறவினர்களுடன் சேர்ந்து பொங்கல் வைத்து கொண்டாடினர். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, தமிழக மக்கள் அனைவருக்கும் என் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அனுபவம் வாய்ந்த விஞ்ஞானிகள் இணைந்து கொரோனாவிற்கான தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ளனர். தடுப்பூசிகளை கண்டுபிடித்த அனைத்து விஞ்ஞானிகளுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மாத சம்பளம்: ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை… உடனே விண்ணப்பியுங்கள்…!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: சென்னை உயர் நீதிமன்றம் (Madras High Court) மொத்த காலியிடங்கள்: 4 வேலை செய்யும் இடம்: சென்னை வேலை: Research Fellow & Research Assistant கல்வித்தகுதி: Post Graduate in Law, Graduate in Law தேர்ச்சி வயது: 30 வயது […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “மாத சம்பளம் ரூ. 1,13,500″… தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலை..!!

சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனம்: தமிழ்நாடு தகவல் ஆணையம் பணி: உதவி புரோகிராமர் (Assistant Programmer) சம்பளம்: மாதம் ரூ.35,900 – 1,13,500 தகுதி: அறிவியல், புள்ளியியல், பொருளாதாரம், வணிகவியல் துறையில் இளநிலை பட்டம் மற்றும் கம்யூட்டர் அப்பிளிகேசன் பிரிவில் முதுகலை டிப்ளமோ முடித்து சம்மந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: http://www.tnsic.gov.in என்ற இணையதளத்தில் […]

Categories
மாநில செய்திகள்

“22 வயதில்… 11 திருமணம்”… இளம் பெண்களின் வாழ்க்கையை நாசமாக்கி… கம்பி எண்ணும் lovely Boy..!!

பொள்ளாச்சியில் பாலியல் கொடூர சம்பவத்தை தொடர்ந்து, தமிழகத்தை அதிர வைத்த அடுத்த சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 22 வயதில் 11 திருமணங்கள் செய்து பெண்களை ஏமாற்றி ஆபாச படம் எடுத்து மிரட்டிய இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த 22 வயதான வாலிபர் கணேஷ் இவருடன் சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண் பேஸ்புக் மூலம் நெருக்கமாக பழகி உள்ளார்.. அவரை ரகசிய திருமணம் செய்து வில்லிவாக்கத்தில் வாடகை எடுத்து தங்க […]

Categories
சென்னை மாநில செய்திகள்

பொங்கலுக்கு புறப்பட்ட மக்கள்…. நிரம்பி வழிந்த சாலை…. போக்குவரத்து நெரிசலை சீரமைத்த காவல்துறை….!!

சென்னையில் வசிப்பவர்கள் பொங்கல் கொண்டாட தங்கள் சொந்த ஊருக்கு செல்வதால் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னையில் வசிப்பவர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட அவர்கள் சொந்த ஊருக்குச் செல்ல ஏதுவாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. தாம்பரம் சானடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், ஒரத்தநாடு, தஞ்சாவூர், மன்னார்குடி,போன்ற ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதேபோல தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து போளூர், திருவண்ணாமலை, […]

Categories
மாநில செய்திகள்

சீனர்களின் கைவரிசை… கடன் செயலி மூலம் மக்களிடம் 300 கோடி அபகரிப்பு..!!

கடன் செயலி மூலம் மக்களிடம் 300 கோடி அபகரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேங்கைவாசலை சேர்ந்த கணேசன் கடன் செயலிமூலம் பணம் பெற்ற நிலையில், அதனைத் திரும்பச் செலுத்துமாறு தொடர்ச்சியாக மிரட்டல் வந்தது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு கந்துவட்டி தடுப்பு பிரிவு மற்றும் சைபர் குற்றப்பிரிவு அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கால் சென்டர் நடத்தி வந்த பிரமோத், பவான் ஆகிய இருவரை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

Breaking: இன்று காலை முதல் அமல்… பெரும் அதிர்ச்சி செய்தி…!!!

சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை 80 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட வந்தது. அதன் பிறகு ஜூன் மாதம் முதல் விலை அதிகரிக்க தொடங்கியது. சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 87.18 ரூபாய்க்கும், ஒரு […]

Categories
மாநில செய்திகள்

கடந்த ஆண்டைவிட இந்த வருடம்…. காற்றின் மாசு குறைவு…!!

கடந்த ஆண்டை விட  இந்த வருடம் சென்னையில் காற்று மாசு குறைவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போகிப்பண்டிகையன்று பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க அரசு தடை விதித்தது. இந்நிலையில் போகி பண்டிகையான இன்று சென்னையில் 2.6 டன் பழைய டயர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை அனைத்தும் கும்மிடிப்பூண்டியில் உள்ள டயர் மறுசுழற்சி ஆலைக்கு அனுப்பப்படுகிறது. ஜனவரி 12 காலை 8 மணி முதல் 13 ஆம் தேதி 8 மணி வரை காற்றின் தரம் 80 மைக்ரோகிராம் /கனமீட்டருக்குள் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: ” மாதம் 35,000 சம்பளம்”… சென்னையில் அரசு வேலை… உடனே விண்ணப்பிங்க..!!

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Assistant Programmer பணியிடம்: சென்னை சம்பளம்: ரூ.35,900 கல்வித்தகுதி:Degree in science or Statistics or Economics or commerce with PG Diploma in Computer Application. தேர்வு: எழுத்துத் தேர்வு, நேர்காணல் விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 29 மேலும் விவரங்களுக்கு www.tnsic.gov.in என்று இணையதளத்தை பார்க்கவும்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

5 வருடம்… “விக் வைத்து ஏமாற்றிய கணவன்”… கழண்டு விழுந்ததால் வசமாக சிக்கிய சம்பவம்..!!

விக் வைத்து ஐந்து ஆண்டுகளாக ஏமாற்றிய கணவர் மீது இளம்பெண் புகார் அளித்துள்ளார். சென்னை ஆலப்பாக்கத்தில் சேர்ந்த ராஜசேகர் என்பவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மேட்ரிமோனியில் மூலம் பெண் பார்த்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இருவீட்டார் சம்மதத்துடன் நடந்த இந்த திருமணத்தில் வரதட்சணை 50 சவரன் நகை மற்றும் இரண்டு லட்சம் ரொக்கப் பணம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் மனைவியுடன் நெருங்கிப் பழகாமல் இருந்துள்ளார். இதனால் இருவர் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. ராஜசேகர் […]

Categories
மாநில செய்திகள்

வனத்துறைக்கு புதிய கட்டிடம்…. 30 கோடியில் மீதி கொடுங்க…. தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கை….!!

வனத்துறை தலைமையக கட்டிடம் கட்டுவதற்கான மீதி நிதியை ஒதுக்குவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க உள்ளது. சென்னையில் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளரான சந்தீப் சக்சேனா ஒரு அரசாணை வெளியிட்டு உள்ளார். அதில் குறிப்பிட்டிருப்பது,’ முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் வேளச்சேரியில் வளத்துறை தலைமையாக கட்டிடம் கட்டுவதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.அதனை கட்டுவதற்காக ரூபாய் 30 கோடி ஒதுக்கி கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“திருவள்ளுவர் பிறந்த தினம்” Non-Veg கிடையாது…. கமிஷனர் அதிரடி உத்தரவு….!!

வருகிற 15-ஆம் தேதி திருவள்ளுவர் தினம் கொண்டாட உள்ள நிலையில் அன்று இறைச்சி கடைகள் மூடப்பட வேண்டும் என கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் மாநகராட்சி கமிஷனர் ஜி. பிரகாஷ் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டிருப்பது பெருநகர சென்னை மாநகராட்சியில் பொது சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் இறைச்சி கூடங்கள், இறைச்சிக் கடைகள் அனைத்தும் வரும் 15ஆம் தேதி திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட இருப்பதால் அரசு உத்தரவின்படி மூடப்பட வேண்டும். ஆடு மாடு மற்றும் இதர […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு:”மாதம் 40 ஆயிரம் சம்பளம்”… 22.01.2021 கடைசி நாள்… உடனே போங்க..!!

சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: சென்னை உயர் நீதிமன்றம் (Madras High Court) மொத்த காலியிடங்கள்: 4 வேலை செய்யும் இடம்: சென்னை வேலை: Research Fellow & Research Assistant கல்வித்தகுதி: Post Graduate in Law, Graduate in Law தேர்ச்சி வயது: 30 வயது வரை இருக்கும். மாத சம்பளம்: ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை இருக்கும். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் பேசுகிறேன் அப்பா கிட்ட…! உதயநிதியின் முடிவால் அதிர்ச்சி… ஆடிப்போன கூட்டணிக் கட்சிகள்.!

திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு இடம் கிடையாது என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை மயிலையில் திமுகவின் கிளை அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, 234 சட்டப்பேரவை தொகுதிகளில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள இடங்களில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்று நான் திமுக தலைவரிடம் சொல்லி இருக்கிறேன். குறிப்பாக சென்னை தியாகராயநகர், மயிலாப்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் திமுக […]

Categories
மாநில செய்திகள்

நீங்க வரணும்…! ப்ளீஸ் தமிழகம் வாங்க…. மோடிக்கு எடப்பாடி அழைப்பு ?

முதலமைச்சர் பழனிசாமி, ஜெயலலிதாவின் நினைவிடத்தை திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்க உள்ளார். சென்னை மெரினாவில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஜெயலலிதாவின் நினைவிட பணி இன்னும் ஓரிரு தினங்களில் முடிய உள்ளது. இந்நிலையில் ஜெயலலிதா நினைவிடத்தை திறப்பதற்காக வரும் 18ம் தேதி டெல்லி சென்று பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி அழைப்பு விடுக்க உள்ளார்.மேலும் முதலமைச்சர் பழனிசாமி ஜெயலலிதாவின் நினைவிடத்தை இன்று பார்வையிட்டு அங்கு நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இறைச்சி கடைகள் அடைப்பு… ஆடிப்போன வியாபாரிகள்… சென்னையில் பரபரப்பு உத்தரவு ..!!

சென்னையில் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும் வருகின்ற 15ஆம் தேதி மூடப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. வருகின்ற 15ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அனைத்து இறைச்சி கூடங்களும் மூடப்படும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,மாநகராட்சி மற்றும் பொது சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சி கூடங்கள் அனைத்தும் வருகின்ற 15ஆம் தேதி மூடப்பட வேண்டும். ஆடு,மாடு இதர இறைச்சி கடைகளில் இறைச்சி விற்பனை செய்வதற்கும், பல்பொருள் அங்காடிகள் மற்றும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் 100% நிரம்பும் திரையரங்குகள்… அதிர்ச்சி தகவல்…!!!

சென்னையில் உள்ள திரையரங்குகள் அரசு விதியை மீறி 100% பார்வையாளர்களுக்கு டிக்கெட் விற்பனை செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் 50 சதவீத இருக்கையுடன் திரையரங்குகளை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. அதன் பிறகு பல நடிகர்கள் 100 சதவித இருக்கைக்கு தமிழக அரசு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்… வெடித்து சிதறிய செல்போன் பேட்டரி… பரபரப்பு…!!!

சென்னை போரூரில் செல்போன் சர்வீஸ் கடையில் செல்போன் பேட்டரி வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் தற்போது செல்போன் என்பது மிகவும் இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அனைவரின் வாழ்க்கையும் செல் போன் மூலமாகவே ஓடும் நிலைக்கு மாறியுள்ளது. ஆனால் செல்போன் பயன்படுத்துவதால் சில பாதிப்புகள் ஏற்படுவதை யாரும் உணர்வதில்லை. அதனை தவறாக பயன்படுத்துவதால் சில ஆபத்துக்கள் ஏற்படுகின்றன. அதன்படி இந்தியாவில் நாளொன்றுக்கு 20 செல்போன்கள் வெடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சென்னை போரூரில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

FlashNews: சென்னை மக்கள் Non- Veg சாப்பிட முடியாது… மாநகராட்சி அதிரடி உத்தரவு…!!!

சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட இடங்களில் அனைத்து கடைகளையும் மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வருகின்ற 15ஆம் தேதி சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட இடங்களில் அனைத்து இறைச்சி கடைகளையும் மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அதனை மீறி இறைச்சி கடைகளை திறக்க அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இறைச்சி பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது. அதனால் சென்னை மக்கள் 15ஆம் தேதி இறைச்சி சாப்பிட முடியாது என்று தெரிவித்துள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்க கூட்டணி ஸ்டராங்…! ஒரு குடும்பம் போல இருக்கோம்… கெத்து காட்டிய அழகிரி …!!

தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரி திமுக கூட்டணியில் நெருக்கடியும் இல்லை நெருடலும் இல்லை என்று தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது பேசியதாவது,வரும் 14ஆம் தேதி பொங்கல் தினத்தன்று மதுரையில் கொண்டாடப்படும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்து கொள்வார். இந்நிகழ்ச்சி “ராகுலின் தமிழ் வழக்கம்” எனும் பெயரில் நடைபெறும். ராகுல் காந்தி தமிழர்களின் கலாச்சாரத்தை மட்டுமே பார்ப்பதற்கு வருவதால் தேர்தல் பரப்புரையில் ஈடுபட மாட்டார். […]

Categories
கொரோனா தடுப்பு மருந்து மாநில செய்திகள்

வந்தாச்சு வந்தாச்சு.!தமிழ்நாட்டுக்கு வந்தாச்சு.! மக்களே ரெடியா இருங்க…!

மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து சென்னைக்கு இன்று விமானம் மூலம் கொரோனா தடுப்பூசி வந்தடைந்தது. மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சீரம் நிறுவனத்திலிருந்து 5 லட்சத்து 56 ஆயிரத்து 500 கோவில் சில்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னைக்கு விமானம் மூலம் இன்று வந்தடைந்தது.விமான நிலையத்தில் இருக்கும் தடுப்பூசிகளை பல்வேறு பகுதியில் உள்ள இடங்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. தடுப்பூசி செலுத்துவதற்காக ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் 5 மில்லி சிரிஞ்சிகள் தமிழ்நாட்டிற்கு 35 லட்சம் சிரிஞ்சிகள் அனுப்பப்பட்டுள்ளது.முதற்கட்டமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திடீரென வெடித்த செல்போன் பேட்டரி… தெறித்து ஓடிய வாடிக்கையாளர்..!!

சென்னையில் செல்போனை பழுது பார்க்கும் போது பேட்டரி சிதறிய சிசிடிவி காட்சி காட்சி வைரலாகி வருகிறது. போரூரில் உள்ள செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் ஒருவர் தன் செல்போனில் பழுது நீக்க வந்துள்ளார். அங்கிருந்த ஊழியர் செல்போனின் பேட்டரியை கழற்றி விட்டு செல்போனை பழுது பார்த்த போது, அந்த வாடிக்கையாளர் செல்போன் திரையில் சுத்தம் செய்ய பயன்படுத்தும் சனிடைசரை பேட்டரியின் மீது தெளித்து சுத்தம் செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென வெடித்து தீ பற்றியதால் அங்கிருந்தவர்கள் அலறி […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: ” மாதம் 35,000 சம்பளம்”… ஜனவரி 29 கடைசி நாள்… சென்னையில் அரசு வேலை..!!

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Assistant Programmer பணியிடம்: சென்னை சம்பளம்: ரூ.35,900 கல்வித்தகுதி:Degree in science or Statistics or Economics or commerce with PG Diploma in Computer Application. தேர்வு: எழுத்துத் தேர்வு, நேர்காணல் விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 29 மேலும் விவரங்களுக்கு www.tnsic.gov.in என்று இணையதளத்தை பார்க்கவும்.

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: டிகிரி முடித்து இருந்தால் போதும்… ” மாதம் 1,77,500 வரை சம்பளம்”… சென்னையில் வேலை..!!

சென்னை உயர்நீதி மன்றத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் Personal Clerk காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. நிர்வாகம் :சென்னை உயர்நீதி மன்றம் பணியின் பெயர் : Personal Assistant to the Honble Judges – 66 Personal Assistant (to the Registrars) – 8 Personal Clerk (to the Deputy Registrars) – 3 கல்வித்தகுதி : ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணியிடம் : சென்னை காலியிடங்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரயிலில் தூங்கிய பெண் பாலியல் வன்கொடுமை… தமிழகத்தில் தொடரும் அவலம்…!!!

சென்னை தாம்பரத்தில் ரயிலின் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடூரர்கள் இதுபோன்ற கொடூர செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. இந்நிலையில் சென்னை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மதுபோதையில் ரயிலில் தூங்கிய பெண்…. பின்னர் நடந்த அதிர்ச்சி…!!

மின்சார ரயிலில் தூங்கிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரத்தில் மின்சார ரயிலில் தூங்கிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டை அடுத்த பரனூர் பகுதியை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் குடிபோதையில் செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயிலில் ஏறியுள்ளார். இதையடுத்து அவர் ரயிலில் நன்கு அயர்ந்து தூங்கி கொண்டிருந்துள்ளார். அப்போது அது நள்ளிரவு நேரம் என்பதால், தாம்பரம் பணிமனையில் தற்காலிக ஊழியர்கள் சுரேஷ், அப்துல் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

விஜய்யின் மாஸ்டர் படம்… நடிகர் விஜய் ரசிகர்களால் பரபரப்பு…!!!

நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை காண்பதற்காக முதல் நாள் முதல் காட்சி டிக்கெட்டிற்கு ரசிகர்கள் ஒன்று கூடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். அந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் 8 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. அதனால் மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து மாஸ்டர் திரைப்பட விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வரை நடிகர் விஜய் நேரில் சந்தித்து பேசினார். அதன்பிறகு பொங்கலை முன்னிட்டு […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பாஸ்போர்ட் இல்ல…! சீனர்கள் செய்த அட்டூழியம்…. முடிவெடுத்த தமிழக போலீஸ் …!!

ஆன்லைன் மூலம் கந்துவட்டி கொடுத்த வழக்கு தொடர்பாக கைதான சீனர்கள் 2 பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். காவலில் எடுத்து சீனர்கள் இரண்டு பேரிடமும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் அவர்களுடைய பின்னணி குறித்த விவரங்கள் சேகரிப்பதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. எனவே அவர்களுடைய விவரங்கள் மற்றும் அவர்கள் மீது இருக்கக்கூடிய குற்ற பின்னணி குறித்து டெல்லியில் இருக்கக்கூடிய சீன தூதரகத்திற்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடிதம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே இன்று முதல் இலவசம்… புதிய அறிவிப்பு… போடு செம…!!!

சென்னை மெட்ரோ ரயிலில் 90 சென்டிமீட்டர் வரை உயரமுள்ள சிறுவர்கள் இலவசமாக பயணிக்கலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டதாக மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தளர்வு களில் ஒன்றான கட்டுப்பாடுகளுடன் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

மக்களே… இன்று காலை 8 மணிக்கே தொடங்கிருச்சு… உடனே போங்க… அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதால் அதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. அதன்படி சென்னை-நாகர்கோவில், சென்னை-கோவை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை எழும்பூர்-நாகர்கோவில் ரயில் ஜனவரி 12 மற்றும் 13 ஆம் தேதி அன்று இரவு 10.30 மணிக்கு புறப்படும். நாகர்கோவிலில் இருந்து ஜனவரி […]

Categories

Tech |