Categories
சென்னை மாநில செய்திகள்

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி 3 நிமிடங்களுக்கு ஒரு முறை…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!

சென்னையில் பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பண்டிகை காலங்கள் மற்றும் முக்கிய நாட்களில் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் நெரிசல் மிகுந்த நேரங்களில் கூடுதல் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. வண்ணாரப்பேட்டை மற்றும் ஆலந்தூர் இடையே மூன்று நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும். அதாவது காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் எட்டு மணி வரையும் மூன்று […]

Categories
Uncategorized சென்னை மாநில செய்திகள்

சென்னையில் அனைத்து கடைகளிலும் இனி இது கட்டாயம்…. மீறினால் அபராதம்…. மாநகராட்சி எச்சரிக்கை….!!!!

சென்னையில் உள்ள அனைத்து கடைகளிலும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் வகையில் இரண்டு குப்பை தொட்டிகளை விரைந்து வைக்க வேண்டும் எனவும் இதனை மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் 85,477 கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த அனைத்து கடைகளிலும் மக்கும்  மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரிப்பதற்காக இரண்டு குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும். இதில் பெரும்பாலான கடைகளில் குப்பை தொட்டிகள் வைக்கப்படவில்லை என ஆய்வில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பாலியல் புகாரில் சிக்கிய பள்ளி தாளாளர்…. விஷம் குடித்து கொண்டே பேசும் வீடியோ வைரல்….!!!

பள்ளி தாளாளர் விஷம் குடித்துக் கொணடே பேசும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. சென்னை மாவட்டத்தில் உள்ள திருநின்றவூரில் ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு தாளாளர் வினோத்(34) பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று முன்தினம் வகுப்புகளை புறக்கணித்து மாணவ-மாணவிகள் பெற்றோருடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வினோத் மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிந்து அவரை தீவிரமாக […]

Categories
மாநில செய்திகள்

“விமான நிலையங்களில் இனி பயணிகள் காத்திருக்க வேண்டாம்”… விமான நிலைய ஆணையகம் முடிவு…!!!!

சென்னை மீனம்பாக்கம் உள்நாடு மற்றும் பன்னாட்டு விமான நிலையங்களில், தனியார் நிறுவனம் ஒன்று விமானங்கள் புறப்படுவது, தரை இறங்குவது, விமான பயணிகளின் உடமைகளை கையாள்வது போன்ற தரைதள பணிகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா காலம் முடிவடைந்து தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதால் பயணிகளின் எண்ணிக்கையும், விமானங்களின் எண்ணிக்கையும் தினம் தோறும் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக தரைதள பணிகளை ஒரு நிறுவனத்தை வைத்து சமாளிப்பது கடினமானதாக இருக்கிறது. அதனால் இந்திய விமான நிலைய ஆணையகம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்…. என்ன காரணம்…? அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள விநாயகபுரம் நேரு நகரில் 40-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளது. இங்கு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 21-ஆம் தேதி அரசு நீர்வளத்துறையினர் அரசுக்கு சொந்தமான இடத்தில் நீங்கள் குடியிருக்கிறீர்கள். எனவே உடனடியாக வீடுகளை காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதனால் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாதவரம் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தண்டையார்பேட்டை கோட்டாட்சியர் ரங்கநாதன், மாதவரம் தாசில்தார் நித்தியானந்தம் ஆகியோர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஒரே சேலையில் “காதலர்கள்” தூக்கிட்டு தற்கொலை…. இதுதான் காரணமா…? கதறும் குடும்பத்தினர்…!!

காதலர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பீர்க்கன்காரணை கண்ணன் தெருவில் எம்.காம் பட்டதாரியான ஜெயராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது சொந்த ஊர் உத்திரமேரூர் ஆகும். கடந்த 6 ஆண்டுகளாக ஜெயராமனும், பி.டெக் பட்டதாரியான யுவராணி என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் யுவராணி தனது காதலனை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ஜெயராமனின் தாயும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாகனத்திலிருந்து வந்த துர்நாற்றம்…. “100 கிலோ” கெட்டுப்போன மாட்டிறைச்சி பறிமுதல்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சிந்தாதிரிப்பேட்டை கூவம் ஆற்றங்கரையோரம் வாகனத்தில் மூட்டை கட்டி வைக்கப்பட்டிருக்கும் மாட்டு இறைச்சியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக உணவு பாதுகாப்பு துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் படி உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ராஜா மற்றும் மாநகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று வாகனத்தை சோதனை செய்தபோது 100 கிலோ மாட்டிறைச்சி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் கால்நடை துறை மருத்துவர்களை வரவழைத்து சோதனை செய்து பார்த்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பிளஸ்-2 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு…. தாளாளரை கைது செய்யும் வரை போராட்டம்….? பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருநின்றவூர் இ.பி காலணியில் ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் தாளாளரான வினோத்(34) என்பவர் 12-ஆம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகளுக்கு கவுன்சிலிங் கொடுப்பதாக கூறி பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த மாணவிகளின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் நேற்று காலை 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் இணைந்து வினோத் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி […]

Categories
மாநில செய்திகள்

யாரையும் விடப்போவதில்லை… பா.ஜ.கவில் அதிரடி நடவடிக்கை தொடரும்… அண்ணாமலை பேட்டி …!!!!!!

பா.ஜ.க தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர்  கூறியதாவது, பா.ஜ.கவின் லட்சுமண ரேகையை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். யாரையும் விடப்போவதில்லை. மேலும் கட்சியில் களை எடுக்கும் நடவடிக்கை தற்போது தொடங்கி ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது. ஆனால் இனிவரும் காலங்களில் களையெடுப்பது உறுதி. பா.ஜ.கவில் மேலும் பல அதிரடி நடவடிக்கைகள் தொடரும் எனவும் பாஜக நாகரிகமான அரசியல் செய்து வருகிறது. மேலும் காயத்ரி ரகுராம் விவகாரத்தில் நான் கருத்து கூற விரும்பவில்லை. தவறு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பிய கமல்ஹாசன்…. வெளியான தகவல்…..!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமலஹாசன். இவர் தனக்கென்று ஓர் தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இவர் தற்போது சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 21 ஆம் தேதி மூத்த இயக்குனர் கே.விஸ்வநாதன்அவர்களின்  பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள கமலஹாசன் ஹைதராபாத் சென்றுள்ளார். அங்கிருந்து சென்னை திரும்பிய போது அவருக்கு உடல் சோர்வாக இருந்துள்ளது. இதனால் நேற்று இரவு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஷாக்!… தமிழ் சினிமா துணை ஒளிப்பதிவாளர் திடீர் தற்கொலை…… அதிர்ச்சியில் திரையுலகினர்…..!!!!!

சென்னை மந்தனந்தபுரம் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் திரைப்படத்துறை உதவி ஒளிப்பதிவாளர் விக்னேஷ் என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக காதல் தோல்வியால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ் கடந்த 22 ஆம் தேதி இரவு தனது வீட்டில் உள்ள படுக்க அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மாங்காடு  காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த […]

Categories
காஞ்சிபுரம் சென்னை திருவள்ளூர் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

#BREAKING: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை – வானிலை ஆய்வு மையம் அலெர்ட் …!!

சென்னை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், காஞ்சிபுரம் திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

செல்போன் மூலம் தாய்க்கு தகவல்…. ஆயுதப்படை பெண் போலீஸ் செய்த காரியம்…. பரபரப்பு சம்பவம்…!!!

ஆயுதப்படை பெண் போலீஸ் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள அமைந்தகரை வ.உ.சி நகரில் வசிக்கும் ஸ்டெல்லா ஆயுதப்படையில் போலீசாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஓட்டுனரான பாண்டியன் என்ற கணவர் உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கிறார். நேற்று முன்தினம் தனது தாயை செல்போன் முலம் தொடர்பு கொண்டு பேசிய ஸ்டெல்லா தனக்கு 8 லட்ச ரூபாய் வரை கடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் கடன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காரை வாங்கி வந்த நபர்…. நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு…. போலீஸ் விசாரணை….!!!

கார் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சென்னை மாவட்டத்தில் உள்ள ஆதம்பாக்கம் சாஸ்திரி நகரில் மோரிஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் மோரிஸ் போலீஸ்காரரான பாவடியான் என்பவருக்கு சொந்தமான காரை 3 1/2 லட்ச ரூபாய்க்கு விலை பேசியுள்ளார். முன்பணமாக 50,000 ரூபாய் கொடுத்துவிட்டு மோரிஸ் காரை வாங்கி பழுதை சரி பார்ப்பதற்காக நண்பருடன் வடபழனி கங்கை அம்மன் கோவில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வழக்குபதிவு செய்ய முயன்ற போது…. சப்-இன்ஸ்பெக்டரின் கன்னத்தில் அறைந்த வாலிபர்…. போலீஸ் அதிரடி….!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புரசைவாக்கம் போலீஸ் குடியிருப்பில் தங்கராஜ்(53) என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமங்கலம் போக்குவரத்து போலீசில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் தங்கராஜ் இரவு நேரத்தில் 100 அடி சாலை, திருமங்கலம் 2-வது அவன்யூ சந்திப்பில் பணியில் இருந்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்ற வாலிபர் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டார். இதனை பார்த்த தங்கராஜ் அந்த வாலிபரை தூக்கிவிட்டு விசாரித்த போது அவர் மது குடித்திருந்தது தெரியவந்தது. […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

போலீஸ் மீது பொய் குற்றசாட்டு கூறினால் – கடும் நடவடிக்கை எடுங்க… ஐகோர்ட் அதிரடி உத்தரவு …!!

போலீஸாருக்கு எதிராக பொய் குற்றச்சாட்டு கூறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து உயர்நீதிமன்ற உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருக்கிறது. சட்டத்தின்படியில் இருந்து தப்பிக்க காவல்துறையினருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாமல் பொய் குற்றசாட்டை தெரிவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருக்கிறது. போலீசாருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டால் உண்மை தன்மை குறித்து விசாரிக்க வேண்டும் என்பதது தொடர்பாகவும் சென்னை உயர்நீதிமன்றம் தன்னுடைய உத்தரவில் தெரிவித்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு: உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு..!!

காந்தி ஜெயந்தி அன்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்துவதற்கு 50 இடங்களில் அனுமதிக்க கேட்ட நிலையில் 6 இடங்களில் மட்டும் நடத்திக் கொள்ளலாம். 44 இடங்களில் உள்ளடங்குகளில் நடத்துக் கொள்ளலாம் என்று ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. சுப்ரமணியம் என்பவர் தாக்கல் செய்துள்ள வழக்கில் ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும். உள்ளரங்க […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: சென்னையில் பள்ளிக்கு ஒரு வாரத்துக்கு லீவ் – மெசேஜ் அனுப்பிய பள்ளி நிர்வாகம்..!!

சென்னை திருவெற்றியூரில் உள்ள ஏஞ்சல் மெட்ரிக் பள்ளி ஒரு வாரம் இயங்காது என பள்ளி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏஞ்சல் மெட்ரிகுலேஷன்  பள்ளி தாளாளர் வினோத் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் அளித்ததையடுத்து பள்ளியில் சுமார் 300-க்கும் மேற்பட்டு மாணவர்கள் காலை 9:00 மணி முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் நடவடிக்கை தாமதமாவதை கண்டித்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனால் போலீஸருக்கும் – மாணவர்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

இது சென்னையா? இல்ல ஊட்டியா…? ரூட்டை மாற்றிய மழை… வெதர்மேன் அப்டேட்…!!!!!!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தொடங்கிய வடகிழக்கு பருவமழையால் சென்னையில் கன மழை வெளுத்து வாங்கியது. மேலும் சீர்காழி போன்ற பகுதிகளிலும் அதிகமான கனமழை பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம்  கூறியதாவது, தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் மேற்கு – வட மேற்கு திசையில் தெற்கு ஆந்திரா, தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரைகளை நோக்கி நகர்ந்து இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிலக்க கூடும்.  […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

புதிதாக வாங்கிய வீட்டில் இறந்து கிடந்த “மத்திய அரசு அதிகாரி”…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி கௌரி பேட்டை பகுதியில் பால்பாண்டி(58) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சி.வி.ஆர்.டி.இ- யில் அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் பால்பாண்டி ஆவடி ஜே.பி எஸ்டேட் 4-வது தெருவில் புதிதாக ஒரு வீடு வாங்கியுள்ளார். அங்கு பழுது பார்க்கும் பணியால் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் அந்த வீட்டிற்கு சென்ற பால்பாண்டி திரும்பி வரவில்லை. இந்நிலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

2-வது மனைவிக்கு மெசேஜ் அனுப்பி விட்டு…. கணவர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வில்லிவாக்கம் பாபா நகரில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுதா என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தம்பதியினர் கொளத்தூரில் பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தனர். இந்நிலையில் சுதாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோபத்தில் கணேசன் தனது மனைவியை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சூரிய உதயத்தை பார்க்க மாணவர்கள்….. விபத்தில் சிக்கி வாலிபர் பலி; 2 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!!

மோட்டார் சைக்கிள் மேம்பால தடுப்பு சுவர் மீது மோதிய விபத்தில் வாலிபர் பலியான நிலையில், 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லியில் இருக்கும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் மதுரையைச் சேர்ந்த ஆலன் ஜெர்மான்ஸ், வேலூரைச் சேர்ந்த தருண்குமார், விருதாச்சலத்தைச் சேர்ந்த பிரவீன் குமார் ஆகியோர் நான்காம் ஆண்டு படித்து வந்துள்ளனர். இவர்கள் மூன்று பேரும் முகப்பேரில் வாடகை வீட்டில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்துள்ளனர். நேற்று முன்தினம் சூரிய உதயத்தை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரூ.13 லட்சம் மோசடி…. போலியான ஆவணம் தயாரித்த மாற்றுத்திறனாளிகள் நல சங்க தலைவர்….. பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எர்ணாவூர் கண்ணிலால் நகல் 2-வது தெருவில் ஆனந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை நண்பர்கள் மாற்றுதிறனாளி நல சங்கத்தில் தலைவராக இருக்கிறார். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு ஆனந்தகுமார் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் சங்கீதா உட்பட 150 மாற்றுத்திறனாளிகளிடம் அரசு ஒதுக்கீடு செய்யும் வீடுகளை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறினார். இதனை நம்பி ஒவ்வொருவரும் தலா ரூ.20,000 என மொத்தம் 12 லட்சத்து 96 ஆயிரம் ரூபாயை ஆனந்தகுமாரிடம் கொடுத்ததாக […]

Categories
மாநில செய்திகள்

“பட்டம் வாங்கினாலும் படிப்பை விடாதீர்கள்”….. மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கூறிய அட்வைஸ்…!!!

சென்னை ராணி மேரி கல்லூரி 104-வது பட்டமளிப்பு விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், பட்டங்களை பெறுபவர்கள் பாடங்களை கற்பதிலிருந்து பாடங்களை உருவாக்கும் அளவுக்கு மாணவர்கள் உயர வேண்டும். கம்பீரமான பாரம்பரியமான பெருமையைக் கொண்டது ராணி மேரி கல்லூரி. இந்தியாவின் முதன்முதலாக தொடங்கப்பட்ட மூன்று மகளிர் கல்லூரிகளில் ஒன்றும், தமிழகத்தில் தொடங்கப்பட்ட முதல் மகளிர் கல்லூரி என்ற பெருமையைக் கொண்டது ராணி மேரி கல்லூரி. அதனைத் தொடர்ந்து பட்டம் பெரும் நாள் […]

Categories
மாநில செய்திகள்

மருமகளுடன் உடற்பயிற்சி செய்யும் மாமியார்… அதுவும் எப்படி தெரியுமா..? குவியும் பாராட்டுக்கள்…!!!!!

புடவையில் மருமகளுடன் உடற்பயிற்சி செய்யும் மாமியாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. சென்னையில் வசித்து வரும் 56 வயது பெண் ஒருவர் ஜிம்மில் புடவை கட்டிக்கொண்டு  உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவானது ஹியூமன்ஸ் ஆப் மெட்ராஸ் என்னும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 56 வயதான அந்தப் பெண் கால் மற்றும் முழங்கால் வலியால் வேதனைப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் அவரது மகன் தினமும் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார். அதன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஊஞ்சல் கயிறு கழுத்தை இறுக்கி…. பெண் இன்ஸ்பெக்டரின் மகன் இறப்பு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஊஞ்சல் கயிறு கழுத்தை இறுக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ஓட்டேரி பட்டாளம் போலீஸ் குடியிருப்பில் சுகுணா என்பவர் வசித்து வருகிறார். இவர் அசோக் நகரில் இருக்கும் போலீஸ் பயிற்சி முகாமில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் ராஜ்குமார் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு நிக்கிலன்(14), நவீன்(11) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். நேற்று மாலை ராஜ்குமார் நிக்கிலனிடம் சாப்பிட ஏதாவது வாங்கி வர வேண்டுமா? என […]

Categories
மாநில செய்திகள்

தி நகர் ஸ்கைவாக் திட்டம்…. இது நம்ம லிஸ்டிலயே இல்லையே…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!!

சென்னை மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக பல்வேறு விஷயங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் மாநகராட்சி தரப்பிலும் பிரத்யேக மேம்பாட்டுத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட தி.நகர் ஸ்கைவாக் பாலம் மிகவும் முக்கியத்துவம் பெற்றதாகும். நாள்தோறும் மூச்சு திணறும் அளவிற்கு வாகன நெரிசல், மக்கள் திரளும் நிறைந்து காணப்படும் பகுதி என்றால் அது தி.நகர் தான். அதில் ரங்கநாதன் தெருவில் உள்ளே நுழைந்து விட்டால் எப்போது வெளிவரும் என்ற அளவிற்கு திக்கு […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் விரைவில் 88 இடங்களில்…. எலெக்ட்ரிக் வாகனம் வைத்திருப்போர் ஹேப்பி…. மாநகராட்சி உத்தரவு…!!!

பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரி பொருட்களின் மூலமாக இயங்கும் வாகனங்களிலிருந்து அதிகளவில் புகை வெளியேறுகிறது. இந்த புகையின் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைகிறது. இதனால் வளி மண்டலம் பாதிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசு படாமல் இருப்பதற்காக தற்போது பல்வேறு மின்சார வாகனங்கள், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். மின்சார வாகனங்களை பயன்படுத்துமாறு பல மாநிலங்களிலும் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் விரைவில் 88 இடங்களில் எலக்ட்ரிக் வாகனங்களின் சார்ஜிங் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“என்னை சதி செய்து மாற்றிவிடீர்கள்”..? கண்ணில் பட்டவர்களை குத்திய தனியார் ஊழியர்… எழும்பூரில் பயங்கரம்…!!!!

சென்னையில் பணி மாற்றம் செய்யப்பட்ட காரணத்தினால் சக ஊழியரை ஓருவர் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வியாசர்பாடி வெங்கடேசபுரம் பகுதியைச் சேர்ந்த விவேக்(30) என்பவர் ஹாத்வே தனியார் இன்டர்நெட் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி தேவி பிரியா, எழும்பூர் தாசில்தார் அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் திருமணத்திற்கு பின் விவேக் அயனாவரம் பக்தவச்சலம் தெருவிற்கு இருப்பிடத்தை மாற்றியுள்ளார். இதனையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

மங்களூரு சம்பவம் எதிரொலி… தமிழக முழுவதும் உஷார் நிலையில் போலீசார்… சென்னையில் தீவிர சோதனை…!!!!!

ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்த சம்பவம் தொடர்பாக  போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள நாகுரி பகுதியில் நேற்று மாலை ஆட்டோவில் மர்ம பொருள் ஒன்று வெடித்ததில் ஆட்டோ தீப்பிடித்தது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் மற்றும் ஆட்டோவில் இருந்த ஒரு பயணி பலத்த காயம் அடைந்துள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினரும், தடவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆட்டோவில் இருந்த குக்கரை கைப்பற்றியுள்ளனர். அந்த குக்கரில் வயர்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போலீசாரின் அதிரடி சோதனை….. வசமாக சிக்கிய கல்லூரி மாணவர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

கஞ்சா விற்பனை செய்த கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள பல்லாவரம் ரேடியல் சாலையில் தனியார் பல்கலைக்கழகம் அருகே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக கணேஷ் அவென்யூவில் நின்று கொண்டிருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ்ராஜ்(21) மற்றும் சையது நசீர்(22) என்பது தெரியவந்தது. இதில் பிரகாஷ்ராஜ் தனியார் பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு சட்டப்படிப்பும், சையது தனியார் இன்ஜினியரிங் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

8-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. என்ன காரணம்….? கதறும் குடும்பத்தினர்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோடம்பாக்கம் கங்கை அம்மன் கோவில் தெருவில் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான உமாபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜனனி(12) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் அரசு பெண்கள் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று மாலை வேலை முடிந்து வீட்டிற்கு வந்த உமாபதி தனது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் உடலை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மகளிடம் புலம்பிய தந்தை…. தம்பதி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

மகன் இறந்த துக்கத்தில் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கருணாகரச்சேரி ராமாபுரம் நியூ தெருவில் விவசாய கூலி தொழிலாளியான தனசேகர்(51) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பூங்கொடி(44) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஹரிஷ்(17) என்ற மகனும், மவுனிகா(24) என்ற மகளும் இருந்துள்ளனர். மவுனிகாவுக்கு திருமணமாகி கணவன் மற்றும் இரண்டு வயதுடைய மகன் இருக்கிறான். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உடல் நல குறைவு காரணமாக ஹரிஷ் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

கால்பந்து வீராங்கனை மரணம்… முன் ஜாமீன் கோரிய மருத்துவர்கள்… வெளியான தகவல்….!!!!

சென்னை வியாசர்பாடி சேர்ந்த பிரியா தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் கலந்து கொண்டு பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இவருக்கு மூட்டு வலி காரணமாக பெரியார் நகர் மருத்துவமனில் கால்முட்டி சவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு வலது கால் அகற்றப்பட்டது.‌ ஆனால் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உயிர் இழப்பு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அரசு மருத்துவர்களின் அலட்சியமற்ற தவறான […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா…! உலக அளவில் 3ஆம் இடம்…. சத்தமின்றி சாதித்த சென்னை…!!!

இன்றைய காலகட்டத்தில் சிசிடிவி கேமரா என்பது மிகவும் முக்கியமானது. ஏனெனில் குற்றங்கள் நடக்கும் போது அதை கண்டுபிடிப்பதற்கு சிசிடிவியில் உள்ள காட்சிகளை வைத்து தான் குற்றவாளிகள் மிக விரைவில் பிடிக்கப்படுகிறார். இதனால் அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி பொருத்த போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் உலக அளவில் அதிக சிசிடிவி கேமராக்களை கொண்ட நகரங்களில் பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி அதிக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட நகரங்களின் பட்டியலில், உலகளவில் சென்னை 3ஆம் இடத்தைப் பிடித்து அசத்தியிருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் : டாக்டர்கள் 2 பேருக்கும் ஜாமீன் வழங்க மறுத்த ஐகோர்ட்..!!

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் முன் ஜாமின் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட மருத்துவர்கள் பால்ராம் சங்கர் சோமசுந்தருக்கு ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது. பெரியார் நகர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பால்ராம் சங்கர் சோமசுந்தரின் ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின் கவன குறைவாக செயல்பட்டதாக இருவர்  மீது ஏற்கனவே காவல்துறை வழக்கு பதிவுசெய்திருந்தது. அவர்கள் இருவரும் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்த நிலையில், சென்னை […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: சென்னை பல்கலை -தமிழ் தேர்வு இரத்து …!!

சென்னை பல்கலைக்கழகம் இன்று மதியம் நடைபெற இருந்த தமிழ் தேர்வையும் ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. ஏற்கனவே இன்று காலையில் நடைபெற இருந்த தேர்வு வினாத்தாள் குளறுபடியால் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலே இன்று மதியம் நான்காவது செமஸ்டர்  தமிழ் பாடத்திற்கான அரியர் தேர்வுகள் நடைபெற இருந்தது.அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு வேறு தேதியில் நடத்தப்படும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியீட்டுகிறது. இரண்டு தேர்வுக்குமான வினாத்தாள் என்பது மாறி இருக்கிறது.   மதியம் வரவேண்டிய வினாத்தாள் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் வேகமாக பரவும் மெட்ராஸ் ஐ… மருத்துவர்களின் எச்சரிக்கை…!!!!!

சென்னையில் நாள்தோறும் மெட்ராஸ் ஐ பாதிப்பு காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள்  மருத்துவமனையை நாடுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். விழியையும், இமயையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்று தான் மெட்ராஸ் ஐ என கூறப்படுகிறது. இந்த பாதிப்பானது காற்று மூலமாகவும், மாசு மூலமாகவும் பரவுகிறது. அதுமட்டுமல்லாமல் மெட்ராஸ் ஐ பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்களை பயன்படுத்துவதாலும் மற்றவர்களுக்கு அந்த தொற்று நோய் ஏற்பட கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த நோயின் அறிகுறிகளாக கண் எரிச்சல், விழிப்பகுதி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமியுடன் பழக்கம்…. மிரட்டி பணம் பறித்த வாலிபர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் சத்தியமூர்த்தி நகரில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா காலகட்டத்தில் பள்ளிகள் மூடப்பட்டதால் சிறுமியின் பெற்றோர் ஆன்லைன் வகுப்பில் படிப்பதற்காக விலை உயர்ந்த செல்போனை வாங்கி கொடுத்துள்ளனர். அந்த போனில் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களை சிறுமி பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது இன்ஸ்டாகிராம் மூலம் குத்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவரான ஜார்ஜ் (19) என்பவருடன் சிறுமிக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் மீன் பிடிக்க சென்ற வாலிபர்…. 3 நாட்களுக்கு பிறகு உடல் மீட்பு…. கதறும் குடும்பத்தினர்….!!

ஏரியில் தவறி விழுந்த வாலிபர் உடல் 3 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது. சென்னை மாவட்டத்தில் உள்ள காந்திநகர் பகுதியில் பரத்குமார்(23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாதவரத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி பரத்குமார் தனது நண்பர்களுடன் புழல் ஏரி ஆலமரம் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி பரத்குமார் ஏரியில் தவறி விழுந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் பரத்குமாரை காப்பாற்ற முயற்சி செய்தும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பிரிந்து சென்ற மனைவி….. தகராறு செய்து தாக்கிய கணவர்…. போலீஸ் நடவடிக்கை…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அமைந்தகரை அய்யாவு காலனியில் ஸ்ரீதர்(28) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில் ஸ்ரீதருக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த விஜயலட்சுமி தனது கணவரை கண்டித்த போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விஜயலட்சுமி தனது கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். நேற்று விஜயலட்சுமி அமைந்தகரை அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது ஸ்ரீதர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மகன் விபத்தில் சிக்கியதாக கூறிய ஆட்டோ ஓட்டுநர்….. நூதன முறையில் ஏமாற்றப்பட்ட மூதாட்டி….. போலீஸ் விசாரணை…!!!

மூதாட்டியிடம் நூதன முறையில் தங்க நகையை பறித்து சென்ற ஆட்டோ ஓட்டுனரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் எஸ்.எஸ்.வி கோவில் தெருவில் சரோஜா(75) என்பவர் வசித்து வருகிறார். நேற்று சரோஜா அப்பகுதியில் இருக்கும் ரேஷன் கடை முன்பு நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஆட்டோ ஓட்டி வந்த ஒருவர் சரோஜாவிடம் “உங்களது மகனுக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. உங்களை கூப்பிட தான் வந்தேன். ஆட்டோவில் ஏறுங்கள்” என கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சரோஜா […]

Categories
மாநில செய்திகள்

உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மாற்றமா?… எங்கு தெரியுமா?…. வெளியான முக்கிய தகவல்….!!!!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனிஸ்வர்நாத் பண்டாரி கடந்த ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி அன்று பணி ஓய்வு பெற்றார். அதனைப் போல உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி எம்.துரைசாமி பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த அவரும் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார். இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் மூத்த நீதிபதியாக உள்ள நீதிபதி ராஜாவை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டார். கடந்த மூன்று மாதங்களாக சென்னை உயர்நீதிமன்ற […]

Categories
மாநில செய்திகள்

ப்ரியாவின் மரணம்…. “தாங்க முடியாத துயரம்”…..ஈடு செய்யமுடியாத மாபெரும் இழப்பு…. முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி..!!

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய தமிழக முதல்வர் ஸ்டாலின்,  வீராங்கனை ப்ரியாவின் மரணம் தாங்க முடியாத துயரம் என்று தெரிவித்துள்ளார். சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரின் 17 வயதான மகள் பிரியா. ராணி மேரி கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வந்த பிரியா கால்பந்து வீராங்கனை ஆவார். பிரியா கால்பந்து விளையாட்டில் மாவட்ட மற்றும் மாநில அளவில் போட்டியில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு திடீரென மூட்டு வலி ஏற்பட்டதை […]

Categories
மாநில செய்திகள்

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் இல்லத்திற்கு நேரில் சென்று முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி…. ரூ. 10 லட்சம் நிவாரண தொகை, அரசுவேலைக்கான நியமன ஆணை வழங்கினார்..!!

சென்னை வியாசர்பாடியில் இருக்கும் கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் இல்லத்திற்கு நேரில் சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, ரூ. 10 லட்சம் நிவாரண தொகை வழங்கினார். சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரின் 17 வயதான மகள் பிரியா. ராணி மேரி கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வந்த பிரியா கால்பந்து வீராங்கனை ஆவார். பிரியா கால்பந்து விளையாட்டில் மாவட்ட மற்றும் மாநில அளவில் போட்டியில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு திடீரென […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தடம் மாறிய பள்ளி மாணவி…. ஆசைகாட்டி மோசம் செய்த கல்லூரி மாணவர்….. பரிதவிக்கும் பெற்றோர்…!!!!

சென்னை மதுரவாயல் பகுதியில் வசித்து வரும் 11ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக பூந்தமல்லியை சேர்ந்த கல்லூரி மாணவரான ஜார்ஜ் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது நாளடைவில் காதலாக மாறி உள்ளது. பின்னர் இருவரும் நெருங்கி பழகியுள்ளனர். இந்த நிலையில் மாணவி வீட்டில் தனியாக இருந்த போது வீட்டிற்கு வந்த ஜார்ஜ் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அதை வெளியே சொல்லிடுவேன் என்று மிரட்டி பலமுறை அந்த மாணவியை வன்கொடுமை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நானும் இங்கு தான் படிக்கிறேன்” ஐ.ஐ.டி மாணவியிடம் ரகளை செய்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஐ.ஐ.டி விடுதியில் தங்கி படிக்கும் மாணவி நேற்று முன்தினம் இரவு நேரத்தில் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது வாலிபர் ஒருவர் அந்த மாணவியிடம் மோட்டார் சைக்கிளில் பின்னால் ஏறி உட்காரும்படி வற்புறுத்தியுள்ளார். மேலும் அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. அப்போது மாணவி அவரை கண்டித்ததால் தானும் அதே ஐ.ஐ.டி-யில் படிக்கும் மாணவர் எனக்கூறி ரகளை செய்துள்ளார். இதுகுறித்து காவலாளியிடம் மாணவி தெரிவித்துள்ளார். பின்னர் காவலாளி அந்த வாலிபரை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் மது அருந்திவிட்டு…. அசைவ உணவு சாப்பிட்ட கல்லூரி மாணவர் இறப்பு…. போலீஸ் விசாரணை…!!!

கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி எஸ்.ஏ காலணியில் மகாவிஷ்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மகாவிஷ்ணுவின் நண்பர் ராம்குமாருக்கு பிறந்தநாள். இதனால் மகாவிஷ்ணு தனது நண்பர்களுடன் இணைந்து பிறந்தநாள் விழாவிற்கு சென்று மது அருந்தியுள்ளார். இதனையடுத்து மகாவிஷ்ணு சென்னை ரெட்டேரி 200 அடி சாலையில் இருக்கும் ஃபாஸ்ட் புட் உணவகத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மருத்துவ கவுன்சில் தேர்வில் தோல்வி….. வெளிநாட்டில் படித்தவர் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அயனாவரம் முனுசாமி தெருவில் மத்திய அரசில் ஜி.எஸ்.டி பிரிவில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்ற ஜெயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தருண்குமார், நவீன்குமார் ஆகிய இரண்டு மகன்கள் இருந்தனர். இதில் நவீன் குமார் கடந்த 2021-ஆம் ஆண்டு ஜார்ஜியா நாட்டில் மருத்துவம் படித்து முடித்துள்ளார். இந்நிலையில் வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்களுக்கு இந்திய […]

Categories
மாநில செய்திகள்

சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான்…. சென்னையில் போலீஸ் காருக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்….!!!!

தமிழகத்தில் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் சில அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு புதிய அபராதம் தொடர்பான அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. அவ்வகையில் திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன திருத்த சட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்தது. சாலை விபத்துக்கள் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் எண்ணிக்கை அதிகமாக உள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. அதனால் விபத்துக்களை குறைக்கும் நோக்கத்தில் தமிழக அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.போக்குவரத்து […]

Categories

Tech |