மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள செங்குன்றம் காந்தி நகர் எம்.ஜி.ஆர் தெருவில் தனலட்சுமி(52) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராஜா(23) என்ற மகன் உள்ளார். நேற்று முன்தினம் மாதவரத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு தனலட்சுமியும், ராஜாவும் மோட்டார்சைக்கிளில் சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் செங்குன்றம் அடுத்த கிரான்ட் லைன் பகுதியில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் வேகத்தடையில் வேகமாக ஏறி இறங்கியதால் […]