Categories
Uncategorized

JUST NOW : வங்கக்கடலில் 24 மணி நேரத்தில் உருவாகிறது தாழ்வு பகுதி!

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு அந்தமான் கடல்பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி  காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாற வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம்  தெரிவித்துள்ளார். மேலும் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாகஉருவான பின்னர் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைய வாய்ப்பு உள்ளது. இதுவரை தமிழகத்தில் பேச்சிப்பாறையில் 3 செ.மீ. ஸ்ரீவில்லிப்புத்தூர் மற்றும் குமரிசித்தரில்  2 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவ காற்று காரணமாக கோவை, நீலகிரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் […]

Categories
மாவட்ட செய்திகள் வானிலை

தமிழகத்தில் இந்த 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..!

தமிழகத்தில் மதுரை, தேனி, சிவகங்கை ,ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் காவிரி டெல்டா, உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Categories

Tech |