தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நவம்பர் 02ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறிப்பாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி உள்ளிட்ட 15 […]
