ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு அருகில் இருந்த 32 நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் 2-ஆவது டவர் பிளாக்கின் பின்புறத்தில் உள்ள கல்லீரல் சிகிச்சை பிரிவில் திடீரென இன்று காலை 11 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் அனைவரும் பதறிப்போயினர்.. இதையடுத்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.. இந்த தகவலறிந்து 3 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த மீட்பு படையினர் […]
