2000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2181 கோடி மதிப்பில் பல திட்டங்களை தொடங்கி வைத்தார்.இந்த திட்டத்தை தீவு மைதானத்தில் வைத்து அவர் தொடங்கினார். இவ்விழாவில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் எஸ். பி. வேலுமணி, ஜெயக்குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஹர்மந்தர் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். […]
