பெங்களூரில் ஆயத்த ஆடைத் தொழிற்சாலை தொழிலாளியை அடித்து கொலை செய்த மூன்று திருநங்கைகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநகர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் உள்ள ஆயத்த ஆடை தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ராம நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மயங்கிய நிலையில் இருந்த ராஜேந்திராவை திருநங்கைகள் 3 பேர் அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். […]
