வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வரும் டி. ராஜேந்தருக்கு சமீபத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இவருக்கு இதயத்தில் செல்லக்கூடிய ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டதால், மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால், தற்போது பூரணமாக குணமடைந்துள்ளார். இந்நிலையில் குடும்பத்துடன் அமெரிக்காவில் ஓய்வு பெற்று வந்த டி. ராஜேந்தர் இன்று அதிகாலை சென்னை திரும்பியுள்ளார். […]
