சென்னை தலைமைச்செயலகத்தில் இதுவரை 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை தலைமைச்செயலகத்தில் அரசு பணிகளுக்காக சுமார் 50% பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சென்னை தலைமைச்செயலகத்தையும் விட்டுவைக்கவில்லை. இதுவரை தலைமைச்செயலகத்தில் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 50 […]
