விழுப்புரத்தில் 2 அரசு பேருந்துகள் நேருக்குநேர் மோதியதில் 21 பேர் படுகாயமடைந்தனர். விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இங்கு சாலை விரிவாக்கப் பணி நடைபெறுவதால் அங்கு வரக்கூடிய வாகனங்கள் அனைத்தும் ஒரே பாதையில் செல்கின்றன. இந்நிலையில் நேற்று இரவு சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற அரசு பேருந்தும், கும்பகோணத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசுப் பேருந்தும் பனையபுரம் அருகே உள்ள அழுக்கு பாலம் இடையே நேருக்கு நேர் மோதி விபத்துக்கு […]
