Categories
மாநில செய்திகள்

அலர்ட்!…. வாகன ஓட்டிகளுக்கு கடும் எச்சரிக்கை…. இனி இப்படி பண்ணா அவ்வளவு தான்…. அதிரடி உத்தரவு….!!!!

18 வயதுக்கு குறைவானவர்கள் வாகனம் ஓட்டுவதை தடுக்கும் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னதாக சிறுவன் ஒருவன் வண்டி ஓட்டி ஏற்பட்ட விபத்தில் இழப்பீடு வழங்க கோரிய வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், 18 வயது பூர்த்தி ஆகாதவர்கள் வாகனங்களை ஓட்டக்கூடாது என்ற விதி உள்ளது. எனவே விபத்துக்கான இழப்பீடு வழங்க முடியாது என தெரிவித்துள்ளனர். இதனால் பெற்றோர்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Categories
மாநில செய்திகள்

கபடி சங்க தேர்தல் அறிவிப்புக்கு தடை…. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு….!!!!

கபடி சங்க தேர்தல் அறிவிப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட அமெச்சூர் கபடி சங்கத்தின் தேர்தல் அறிவிப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை தேர்தல் நடைபெறவிருந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

குழந்தைகள் ஆணையம்…. அரசாணைக்கு தடை… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!

தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் கடந்த 2005 டிசம்பரில் இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த 2013 ஆம் ஆண்டில் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் நியமனத்தை ரத்து செய்த அரசாணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

அரசு பணி நியமனங்களில் இவர்களுக்கும் இட ஒதுக்கீடு…. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு….!!!!

சென்னை உயர்நீதிமன்றம் அரசு பணி நியமனங்களில் மூன்றாம் பாலினத்தவருக்கும் குறிப்பிட்ட சதவீதம் அளவில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதுவரை மூன்றாம் பாலினத்தவருக்கு அரசு பணியிடங்களில் எந்த ஒரு இட ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவருக்கு வயது வரம்பு சலுகையுடன் மேலும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதி, பெண்கள் […]

Categories
மாநில செய்திகள்

தற்போது கோயில் கடைகளை மாற்றக்கூடாது!…. ஹைகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான புது மண்டபத்தில் இயங்கி வந்த கடைகளை தற்போது அகற்றக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. குன்னத்தூர் சத்திரம் பகுதியில் புதிய கடைகள் கட்டப்பட்ட நிலையில் அங்கு மின் இணைப்புகள் வழங்கப்படவில்லை. எனவே அனைத்து கடைகளுக்கும் மின்னிணைப்பு வழங்கப்பட்ட பின்னரே கடைகளை அகற்ற வேண்டும் என்று ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

அறங்காவலர்கள் இல்லாத கோயில்கள்…. ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள கோவில்களில் அறநிலையத்துறை ஊழியர்களை கோவில் பணி ஊழியர்களாக நியமித்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் டி.ஆர்.ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி முன் விசாரணைக்கு வந்த போது மனுதாரர், அறங்காவலர்களுக்கு மட்டுமே கோவில் ஊழியர்களை நியமிப்பதற்கு அதிகாரம் உள்ளது. இந்த விஷயத்தில் அறநிலையத்துறை ஆணையருக்கு எந்த விதமான அதிகாரமும் கிடையாது. தமிழகத்தில் சுமார் 19,000 கோவில்களில் அறங்காவலர்களே இல்லை என்று கூறப்பட்டது. ஆனால் அரசு தரப்பில், உள்ளாட்சி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு ஷாக்!…. ஹைகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா 2-வது அலையை தொடர்ந்து 3-வது அலை பாதிப்பு நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கியது. கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றது. இதையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். மேலும் பிப்.1 ஆம் தேதி முதல் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விரைவில் பாடத்தை நடத்தி முடிக்க […]

Categories
மாநில செய்திகள்

அர்ச்சகர்கள் நியமன வழக்கு…. ஹைகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

கடந்த 2020-ஆம் ஆண்டில் இந்து சமய அறநிலையத்துறை, கோயில்களில் பூசாரிகள், அர்ச்சகர்கள், பரம்பரை அறங்காவலர்கள் பணி நிபந்தனை மற்றும் நியமனம் தொடர்பாக புதிய விதிகளை கொண்டுவந்தது. அந்த வகையில் 18 வயதிலிருந்து 35 வயது வரை உள்ளவர்களை மட்டுமே அர்ச்சகராக நியமிக்கலாம் என்றும், அவர் ஒரு ஆண்டு பயிற்சி முடித்தவராக இருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் கொண்டுவரப்பட்டது. இந்த புதிய விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் வழக்கு தொடர்ந்தனர். இந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஷாக்!…. ஹைகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் இடமாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதி வழங்க உத்தரவிடுமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். அப்போது, “அரசு ஊழியர்களுக்கான இடமாறுதல் என்பது பணி நிபந்தனைகளில் ஒன்றாகும். எனவே அரசு ஊழியர்கள் இடமாறுதலை ஒருபோதும் உரிமையாக கோர இயலாது. திறமையான மற்றும் பயனுள்ள நிர்வாகத்தை உறுதி செய்வது, பொதுநலன் கருதி பணியாளரை இடமாற்றம் செய்வது பொது நிர்வாகத்தின் தனிசிறப்பு. […]

Categories
மாநில செய்திகள்

தமிழக காவல்துறையில் 90% அதிகாரிகள் ஊழல்வாதிகள்…. ஹைகோர்ட் கண்டனம்….!!!!

தமிழக காவல்துறையில் 90% அதிகாரிகள் ஊழல்வாதிகளாகவும், திறமையற்றவர்களாகவும் உள்ளனர் என்று சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் 10% அதிகாரிகள் மட்டுமே நேர்மையானவர்களாகவும், திறமையானவர்களாகவும் உள்ளனர் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதேபோல் ஊழல் அதிகாரிகளை களைந்து, திறமையற்ற அதிகாரிகளுக்கு போதிய பயிற்சி வழங்கப்பட வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

குடும்ப கட்டுப்பாடுக்கு பிறகு பெண் குழந்தை பிறந்தால்…. இதை செய்யுங்க!…. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு….!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழியில் வசித்து வரும் தனம் என்பவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் தனம் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2014-ஆம் ஆண்டு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொண்டார். ஆனால் அவருக்கு மீண்டும் கர்ப்பம் தரித்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தோல்வியடைந்ததாக ரிப்போர்ட் கொடுத்துள்ளனர். இதனால் கோபமடைந்த தனம் தனக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று […]

Categories
மாநில செய்திகள்

போடு தகிட தகிட!… அரசு மருத்துவர்களுக்கு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

கிராமப்புறங்களில் பணிபுரியக்கூடிய அரசு மருத்துவர்களுக்கு முதுகலைப் படிப்பில் ( MD.,MS., ) 50 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் 30 சதவீதம் மதிப்பெண் என இரண்டுமே வழங்க தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுபடி மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று கூறி மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் பொது பிரிவிலும் இவர்கள் பங்கேற்பதற்கு தடை இல்லை என்று தெரிவித்துள்ளது.

Categories
அரசியல்

“அடக்கடவுளே!”…. அரசு அதிகாரிகளுமா?…. ஓபிஎஸ் குற்ற பின்னணியில்…. சிக்கும் கருப்பு ஆடுகள்…!!!!

முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அனுமதியின்றி அரசு நிலங்களில் 500 கோடி ரூபாய் மதிப்பிலான கிராவல் மண்ணை எடுத்துள்ளதாக தேனி மாவட்டம், உப்பார்பட்டி பகுதியை சேர்ந்த ஞானராஜன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் முன்னாள் துணை முதல்வரான ஓ.பன்னீர் செல்வத்துக்கு தன்னுடைய உதவியாளர் அன்னபிரகாசம் மற்றும் அவருடைய உறவினர்கள் உடந்தையாக இருந்ததாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் மணல் எடுத்த பிறகு அந்த அரசு நிலங்களை தனியார் சொத்துக்களாக மாற்றியுள்ளதாகவும் உடனடியாக இது குறித்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“மீண்டும் ஆன்லைன் வகுப்புகள்?”…. ஹைகோர்ட் வழங்கிய ஆலோசனை…. அன்புமணி ராமதாஸ் வரவேற்பு….!!!!

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக ஜனவரி 31-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கல்லூரி மாணவர்கள் மற்றும் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை ஜனவரி 20-ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழக அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களான 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகளுக்கு தடை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : புதுச்சேரி புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடையில்லை….. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு….!!!

ஒமைக்ரான் பரவல் காரணமாக பல மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் புத்தாண்டின் பொழுது கடற்கரைக்கு செல்ல கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் மட்டும் இதுவரை எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. இதனால் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு சில கட்டுப்பாடுகளை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: “விதிகளை பின்பற்றாமல் பேனர் வைக்க அனுமதிக்காதீர்”…. சென்னை உயர்நீதிமன்றம் …!!!!

தமிழகத்தில் சட்டவிரோதமாக பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்படுவதை தவிர்க்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேனர் வைப்பதில் விதிமீறி செயல்படுபவர்களுக்கு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி விளக்கமளித்தது. இதனை தொடர்ந்து முதல்வர் பதவியேற்றபோது கூட பேனர்கள் வைக்கப்படுவது தவிர்க்கப்பட்டதாக திமுக தரப்பில் வழக்கறிஞர்வாதிட்டார். இந்நிலையில் பேனர் வைக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜிவி பிரகாஷ் படத்திற்கு தடை…. உயர் நீதிமன்றம் வரை சென்ற வழக்கு…. தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க உத்தரவு…!!!

ஜிவி பிரகாஷின் படத்தினை தடை செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கிரிக்கஸ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரிப்பில், வசந்தபாலன் இயக்கத்தில், பிரபல நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயில். இந்தப் படத்தில் ஜிவிக்கு ஜோடியாக அபர்ணதி நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் நந்தன் ராம், பசங்க பாண்டி, ராதிகா உள்ளிட்ட மேலும் பலர் நடித்துள்ளனர். ஜெயில் திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 9ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்யக்கூடாது… உத்தரவு நீட்டிப்பு… உயர்நீதிமன்றம்…!!!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது என்ற உத்தரவை நீடிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பணம் மோசடி செய்ததாக அதிமுக பிரமுகரான விஜய் நல்லதம்பி புகார் அளித்திருந்தார். இந்த புகார் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வருவதற்கு, முன்பாகவே உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் பணத்தை இழந்தவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தாய்… சிறை தண்டனையை உறுதி செய்த உயர் நீதிமன்றம்..!!!

மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண்ணுக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. சென்னையை சேர்ந்த வசந்தி என்பவர் பணத்தாசையால் தனது 13 வயது மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக புகார் வந்தது.  பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பெயரில் அவரது தாய் உள்ளிட்ட 10 பேர் மீது விபச்சார தடுப்பு மற்றும் போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் சிறுமியின் தாய்க்கு 10 ஆண்டு சிறையும், கைது செய்யப்பட்டவர்களுள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை …. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு….!!!!

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளால் இளைஞர்கள் தங்களுடைய பணத்தை இழந்து விடுவதோடு மட்டுமல்லாமல் தற்கொலையும் செய்து கொள்கின்றனர். இந்த சம்பவமானது அதிகரித்துக்கொண்டே இருந்த நிலையில் இது போன்ற ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பல தரப்பினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் 21- ஆம் தேதி அன்று ஆன்லைன் ரம்மி விளையாட்டிர்க்கு அதிமுக அரசு தடை செய்தது. ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

Justin: புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைத்து பிறப்பித்த உத்தரவு நீட்டிப்பு… சென்னை உயர்நீதிமன்றம்…!!!

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்த மற்றும் பட்டியலின வகுப்பினருக்கு உரிய வகையில் சுழற்சி முறை இட ஒதுக்கீடு வழங்கவில்லை என்று கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க உத்தரவிட்டு இருந்தது. தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலை நிறுத்திவைத்து பிறப்பித்த உத்தரவு நீட்டிக்க படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால் உள்ளாட்சித் தேர்தலை நிரந்தரமாக தள்ளிப்போட முடியாது எனவும் சென்னை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

ரூ.200 அபராதம் வசூலிக்க தடை…. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!

முக கவசம் அணிந்து அவர்களிடம் அபராதம் வசூலிக்க மெட்ரோ நிர்வாகம் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. கொரோனா காரணமாக முக கவசம் அணியாமல் மெட்ரோ ரயில் நிலையம் வருபவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அபராதம் விதிக்க தமிழக சுகாதாரத் துறைக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,சென்னை மெட்ரோ நிர்வாகம் அபராதம் குறித்து பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பை ரத்து செய்து […]

Categories
மாநில செய்திகள்

முதல்ல இந்த கொடுமையை ஒழிக்க…. தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவு போட்ட உயர்நீதிமன்றம்….!!!!

தமிழகத்தில் கழிவுகளை அகற்றுவதற்கு மனிதர்களை பயன்படுத்தும் நடைமுறையை ஒழிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. தமிழகத்தில் பாதாள சாக்கடை, கழிவு நீர் தொட்டிகள், சுத்தம் செய்வதற்கு மனிதர்களை பயன்படுத்தக்கூடாது என்றும், விஷவாயு தாக்கி உயிர் இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், சபாரி அந்தோலன் என்ற அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : குரூப்-4 தேர்வு முறைகேடு… வெட்கக்கேடான நிகழ்வு… சென்னை உயர்நீதிமன்றம்…!!!

குரூப்-4 தேர்வு முறைகேடு என்பது வெட்கக்கேடான நிகழ்வு என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பல கேள்விகளை சென்னை உயர்நீதிமன்றம் முன் வைத்துள்ளது. அதன்படி, 1) முறைகேடு பிரச்சினையால் தேர்தல் ரத்தாகும் போது தேர்வு மட்டும் ரத்து செய்யாதது ஏன்? 2)ஏடிஎம் மையங்களில் நிரப்ப பணம் எடுத்துச் செல்லும்போது வாகனங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. பல லட்சம் பேரின் எதிர்காலம் தொடர்பான விடைத்தாள்களுக்கு போதிய பாதுகாப்பு தராதது ஏன்? 3) முறைகேடு செய்த தமிழகத்தின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிரடி காட்டிய ஐகோர்ட்…. ஏமாந்து போன இபிஎஸ்… குஷியில் திமுக உப்பிக்கள் …!!

திமுக எம்பிக்கள் கனிமொழி, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் தொடர்ந்த அவதூறு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளது. விழுப்புரத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தின்போது குப்பையிலும் ஊழல் செய்து உள்ளதாக அப்போதைய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது கனிமொழி எம்பி குற்றம் சாட்டியிருந்தார். இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக அரசு குறித்து அவதூறாக பேசியதாக கனிமொழி மீது வழக்கு […]

Categories
மாநில செய்திகள்

Breaking:  சென்னை மழை, வெள்ள பாதிப்பு தொடர்பாக… சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் வீடுகளில் நீர் புகுந்துள்ளது. குறிப்பாக சென்னை எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி தருகின்றது. போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது, சாலைகளில் மரங்கள் ஆங்காங்கே சாய்ந்து விழுந்துள்ளன. ‘கடந்த 2015ஆம் ஆண்டு வெள்ளத்திற்கு பிறகும் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்’? என்று தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் சென்னை மழை, வெள்ள பாதிப்பு தொடர்பாக […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: 3-ம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு கோரிய வழக்கு… சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!!

சென்னை அமைந்தகரையை சேர்ந்த கிரேஸ் பானு கணேசன் என்ற திருநங்கை, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்றும், சென்னை உயர்நீதிமன்ற அலுவலக, நூலக உதவியாளர்கள் தேர்வில் 3-ம் பாலினத்தவர்களுக்கு 1% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது.  இந்த வழக்கை இன்று விசாரணை செய்த நீதிபதிகள் மூன்றாம் பாலினத்தவருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தமிழக […]

Categories
மாநில செய்திகள்

நில ஆக்கிரமிப்பை அரசு தொடர்ந்து அனுமதித்தால்…. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தமிழக அரசு அலட்சியத்துடன் செயல்பட்டு வருவதாக  சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தியை தெரிவித்துள்ளது. 9 நபர்கள் மீது சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, வெள்ளாளகுண்டம் கிராமத்தில், அரசு மற்றும் நெடுஞ்சாலைத் துறையினருக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கட்டடங்கள் உருவாக்கி அரசு நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளதாக எஸ். ராஜா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கானது நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு […]

Categories
மாநில செய்திகள்

குயின்ஸ்லேண்ட்டை 4 வாரங்களில் அப்புறப்படுத்த…. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் உள்ள கோவில்களின் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால் சட்டப்போராட்டம் நடத்தி அவற்றை மீட்கும் நடவடிக்கைகளில் தமிழக அரசு மேற்கொள்ளும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு  கூறியுள்ளார். மேலும் கோவில் இடங்களில் காலங்காலமாக குடியிருப்பவர்களுக்கு இனிமேல் பட்டா வழங்க முடியாது என்று கூறியுள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சேகர்பாபு, குயின்ஸ்லேண்ட் நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 177 ஏக்கர் நிலம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்றும், நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தி கோயில் நிலம் என்று உறுதிப்படுத்தி அதற்கான நடவடிக்கை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 3 மாதத்திற்குள்…. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

வேலூர் மாவட்டம் அரக்கோணம் தாலுகாவில் புறம்போக்கு நிலத்தில் அரசு அனுமதி பெறாமல் அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டிருந்தது. இந்த சிலையை எடுக்கும்படி தாசில்தார் உத்தரவிட்டுள்ளார். ஆனால் வழக்கறிஞர் வீரராகவன் என்பவர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் ஆஜராகி ஏற்கனவே உச்சநீதிமன்றம் நெடுஞ்சாலைகளில் சிலைகளை வைக்கக்கூடாது என்று தீர்ப்பளித்துள்ளதால் சிலைக்கு எடுப்பதில் தவறில்லை என்று அவர் கூறியதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

நடவடிக்கை எடுக்க… பதிவாளருக்கு அதிகாரம் உண்டு… சட்டப்பிரிவு செல்லும்… ஐகோர்ட் அதிரடி!!

முறைகேடுகளில் ஈடுபடும் கூட்டுறவு சங்க தலைவர், துணைத்தலைவரை இடை நீக்கம் செய்ய வகை செய்யும் சட்டப்பிரிவு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முறைகேட்டில் ஈடுபடும் கூட்டுறவு சங்க தலைவரை சஸ்பெண்ட் செய்ய பதிவாளருக்கு அதிகாரம் வழங்கும் சட்டம் செல்லும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.. கூட்டுறவு சங்கத்தின் பதவி ஏற்பவர்கள் அதன் சட்ட விதிகளுக்கு கட்டுப்பட வேண்டும்.. முறைகேட்டில் ஈடுபடும் தலைவர், துணைத் தலைவரை சஸ்பெண்ட் செய்ய பதிவாளருக்கு அதிகாரம் தந்தது சரியே. நிர்வாகிகள் விதி […]

Categories
மாநில செய்திகள்

வேணாம்…! அந்த புலியை கொல்லாதீங்க…. உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்…!!!

நீலகிரி மாவட்டம் கூடலூர், மசினகுடியில் சமீபத்தில் 2 பேரை புலி கொன்றுள்ளது. அந்த டி23 என்ற ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணி நேற்று 10 வது நாளாக நடந்து வந்த நிலையில் 11 நாளான இன்று தீவிர தேடுதல் வேட்டையின் பயனாக சிங்காரா வனப்பகுதியில் டி23 புலியை வனத்துறையினர் சுற்றி வளைத்துள்ளனர். புலிக்கு மயக்கமருந்து கொடுத்து பிடிப்பதாக வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். விரைவில் புலி பிடிபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் நீலகிரியில் […]

Categories
மாநில செய்திகள்

நடவடிக்கை எடுக்கவில்லையென்றால்…. அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கக் கூடாது… ஐகோர்ட் அதிரடி!!

ஊழல் வழக்குகளில் சிக்குபவர் மீது நடவடிக்கை எடுக்காத உயர் அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கக் கூடாது என்று ஐகோர்ட் காட்டமாக தெரிவித்துள்ளது. பாஸ்கர் என்பவர் ரூ 1,500 லஞ்சம் பெற்ற வழக்கில் இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் வைத்தியநாதன், நக்கீரன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஊழல் வேர் பரவி கரையான் போல் சமுதாயத்தை செல்லரித்துள்ளது. லஞ்சம் பெறுவது என்பது தற்போது வாடிக்கையாகிவிட்டது. ஊழல் வழக்குகளில் சிக்குவோருக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. கிளப்களில் பதிவுத்துறை அதிகாரிகள் சோதனை செய்யலாம்… ஐகோர்ட் அதிரடி!!

தமிழகம் முழுவதும் உள்ள பொழுதுபோக்கு கிளப்களில் பதிவுத்துறை அதிகாரிகள் சோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலீஸ் ரெய்டு நடத்த தடை விதிக்க கோரி கிளப் உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்தவழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது  தமிழ்நாடு முழுவதும் உள்ள பொழுதுபோக்கு கிளப்களில், பதிவுத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள வேண்டும். கிளப்புகள் மீது கிரிமினல் வழக்குகள் இருந்தால் பதிவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கிளப்கள், சொசைட்டிகளின் ஆய்வு செய்வது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி தனி நபர்கள் யானை வளர்க்க தடை…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் இனிமேல் யானைகளை தனிநபர்கள் கட்டுப்பாட்டில் வைக்கக்கூடாது என்று சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோவில் யானைகள் பராமரிப்பு தொடர்பான வழக்கு  சென்னை ஹைகோர்ட்டில்  விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையின் போது தமிழகத்தில் கோவில் யானைகள்,வளர்ப்பு யானைகள், வனத்துறை யானைகளின் எண்ணிக்கை, வயது, உடல்நிலை குறித்த அறிக்கை மற்றும் யானையின் வீடியோ பதிவையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவேலு […]

Categories
மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல்….தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நடைபெறும்  உள்ளாட்சித் தேர்தலில் தேர்தல் பார்வையாளராக மத்திய அரசு பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று அதிமுக அளித்த மனுவை பரிசீலனை செய்ய வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது . தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 ஆகிய இரு தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. அதனை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று அதிமுக சார்பில் சென்னை ஹைகோர்ட்டில் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

கார்களில் பம்பர்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது.. சென்னை ஐகோர்ட் அதிரடி!!

4 சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்துவதற்கு மத்திய அரசு விதித்த தடையை நீக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது 4 சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்துவதற்கு மத்திய அரசு சமீபத்தில் தடை விதித்திருந்தது. இந்த நிலையில் பம்பர் தயாரிப்பு நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடையை நீக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தது.. இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, பொதுமக்களின் நலன் கருதியே மத்திய அரசு இந்த தடையை விதித்ததாகவும், எனவே அதனை நீக்க […]

Categories
மாநில செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிசூடு…. ஜனநாயகத்தின் மீது விழுந்த ஒரு வடு…. சென்னை உயர்நீதிமன்றம்….!!!!

தூத்துக்குடியில், கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்காக போராடிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள்.  இது தொடர்பான வழக்கை  விசாரித்த மனித உரிமை ஆணையம் இந்த வழக்கினை முடித்து வைத்தது.  ஆனால், ஒரு சில சமூக ஆர்வலர்கள் அந்த தீர்ப்புக்கு எதிராக சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்கள்.  அதில் மனித உரிமை ஆணையம் மறுபடியும் வழக்கை எடுத்து நடத்த வேண்டும் எனவும், அவர்கள் நடத்தும் விசாரணை முறையானதாக கிடைக்கிறதா என்பதையும் நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

கோயில் யானைகளின் உடல் நலம்… “நேரில் ஆய்வு செய்யனும்”… நீதிமன்றம் உத்தரவு..!!

தமிழகத்தில் அனைத்து கோயில் யானைகளின் உடல் நலம் குறித்து கால்நடை மருத்துவர் மூலம் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழக முதன்மை தலைமை வனப் பாதுகாவலருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. வளர்ப்பு யானைகள் மற்றும் கோயில் யானைகள் பராமரிப்பு தொடர்பான வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. யானைகள் நலன் குறித்து அறிக்கை அளிக்கவும் வனத்துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

வரி ஏய்ப்பு விவரங்கள்…. இணையத்தில் வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!

சொத்துவரி செலுத்தாமல் ஏமாற்றியவர்களின் விவரங்களை இணையத்தில் வெளியிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரி ஏய்ப்பு, வரி பாக்கி விவரங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் அனைவரும் தெரிவிக்கும்படி வைக்க வேண்டும். சொத்துவரி மதிப்பீடு, வரி வசூலில் மெத்தனப் போக்கு மற்றும் ஊழலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதிக கட்டணம் வசூலித்து வணிக நோக்கில் செயல்படும் கல்வி நிறுவனங்கள், வரி செலுத்த தயங்குகின்றன இது மிகுந்த வேதனை அளிக்கிறது. சுதந்திரம் அடைந்து […]

Categories
மாநில செய்திகள்

குண்டாசை ரத்து செய்யக்கோரி… பப்ஜி மதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு…!!!

டாக்ஸி மதன் 18+ என்ற யூடியூப் சேனலில் ஆபாச வார்த்தைகளுடன் தடைசெய்யப்பட்ட பப்ஜி கேமை நேரலையில் விளையாடி வந்தார் மதன். இந்த கேமில் அவருடன் சேர்ந்து ஆபாசமாக பேசிய பெண்ணின் குரல் அவரின் மனைவி என்பது தெரியவந்தது. இதையடுத்து  மனைவி கிருத்திகா உடன் அவரின் 8 மாத குழந்தையும் சிறையில் அடைக்கப்பட்டார். குழந்தையின் நலன் கருதி தாய் கிருத்திகாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. பிறகு தலைமறைவாக இருந்த மதனை போலீசார் கைது செய்து புழல் சிறையில் […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி….!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் உரிய தகுதிகள் மற்றும் தகுந்த பயிற்சிகள் பெற்றுள்ள இந்துக்களில் அனைத்து ஜாதியினரையும் ஜாதி வேறுபாடின்றி அர்ச்சகராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வந்தது . இதையடுத்து தமிழக அரசு கடந்த 2002ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினையும், அரசு தலைமை வழக்கறிஞர்களின் கருத்துக்களையும் பரிந்துரை செய்து உரிய பயிற்சிகள் பெற்ற அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்று அரசாணை வெளியிட்டது. இந்நிலையில் குறிப்பிட்ட ஜாதியினரை தவிர மற்றவர்கள் […]

Categories
உலக செய்திகள்

இது நன்கொடை அல்ல..! அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கு… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

சென்னை உயர்நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதத்துடன் நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. தமிழ் திரையுலக முன்னணி நடிகரான விஜய் கடந்த 2012-ஆம் ஆண்டில் பிரித்தானியாவிலிருந்து ரோல்ஸ் ராய்ஸ் எனும் சொகுசு காரை இறக்குமதி செய்திருந்தார். ஆனால் நடிகர் விஜய் அந்த சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்தாமல் இருப்பதற்கான விலக்கு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் ரூ.1 லட்சம் அபராதத்துடன் நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை உயர் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு…. சென்னை உயர்நீதிமன்றம்….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகளும் தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் சில கிராமப்புறங்களில் இருக்கும் பள்ளி மாணவர்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை கவனிக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். இந்நிலையில் தனியார் பள்ளிகளை போலவே கிராமப்புறங்களிலும் பயிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வசதி […]

Categories
மாநில செய்திகள்

எம்பி, எம்.எல்.ஏ வழக்குகளை விரைந்து முடிக்கவும்…. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். கொரோனா பாதிப்பு குறையும் வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அரசு தெரிவித்து வருகிறது. அதன் காரணமாக நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை காணொலிக் காட்சி மூலமாக நடத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த வாரம் முதல் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை […]

Categories
மாநில செய்திகள்

நீர்நிலைகளில் கட்டுமானத்திற்கு அனுமதிக்கக் கூடாது….. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நீர்நிலைகளில் எந்த கட்டுமானமும் மேற்கொள்ள அனுமதிக்க கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு பெரும்பள்ளம் ஓடை இன் இருபுறங்களிலும் கான்கிரீட் சுவர் எழுப்பும் திட்டத்திற்கு தடை கோரிய வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், “தமிழகம் முழுவதும் நீர் நிலைகளில் எந்த கட்டுமானமும் மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கக்கூடாது. நீர்நிலைகளை சிதைக்காமல் காக்க வேண்டும்” என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

கட்டுப்பாடுகளை தொடர வேண்டும்… பரபரப்பு உத்தரவு…!!!

கொரோனா தொற்று பரவல் தணியும் வரை கட்டுப்பாடுகளை தொடர வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று காரணமாக மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் விளைவாக தமிழகத்தில் பல மாநிலங்களில் தொற்று ஓரளவு குறைந்ததால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. தற்போது 27 மாவட்டங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகள், தேநீர் கடைகள், பேக்கரிகள், கட்டுமான அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளையும் செயல்பட அரசு […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் 50 சதவீதம் பணியாளர்களுடன் அனுமதி…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் தமிழகத்தில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் ஜூன் 21-ஆம் தேதி வரை நீட்டிக்கபடுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் செயல்படும் என தெரிவித்துள்ளார். எஞ்சிய மவ்வட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று […]

Categories
மாநில செய்திகள்

ஜூன் 14 முதல் 50 சதவீதம் பணியாளர்களுடன் அனுமதி…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இந்நிலையில் ஜூன் 14ஆம் தேதி முதல் 50 சதவீதம் பணியாளர்களுடன் சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளை செயல்படும் என பதிவாளர் தனபால் அறிவித்துள்ளார். நீதிமன்ற ஊழியர்கள் இரண்டு பிரிவுகளாக பிரித்து இரண்டு நாட்கள் சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும். மறு உத்தரவு வரும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும். ஜூன் 30 வரை நீதிமன்றப் பணிகள் ஆன்லைனில் தொடரும். ஜூன் 14 ஆம் தேதி முதல் அனைத்து நீதிபதிகளும் வழக்குகளை விசாரிப்பார்கள் என்று […]

Categories
மாநில செய்திகள்

ஜூன்-14 முதல் 50% பணியாளர்களுடன்….. உயர்நீதிமன்றம் இயங்கும் – வெளியான அறிவிப்பு…!!!

ஜூன் 14ம் தேதி முதல் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை 50% பணியாளர்களுடன் மட்டுமே செயல்படும் என்று பதிவாளர் அறிவித்துள்ளார். மறு உத்தரவு வரும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்குமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 29 வழக்கறிஞர்களும், மதுரை கிளைக்கு 15 அரசு வழக்கறிஞர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |