கோவில் குளத்தில் 2 லட்சம் மதிப்பிலான மீன்கள் செத்து மிதந்தது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி ஒத்த தெருவில் பிள்ளையார் கோவில் இருக்கின்றது. இந்த கோவில் அருகிலேயே குளம் ஒன்று இருக்கின்ற நிலையில் ஒருவர் குத்தகைக்கு எடுத்து அங்கு மீன்களை வளர்த்து வருகின்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் பிள்ளையார் கோவில் குளத்தில் 2 லட்சம் மதிப்பிலான மீன்கள் செத்து மிதந்தது. இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகர்மன்ற தலைவர் சோழராஜன் அங்கு […]
