திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியில் வசித்து வந்தவர் லோகநாதன்(25). இவரும் நாட்றம்பள்ளி பச்சூர் பகுதியைச் சேர்ந்த ரத்தினம்(45) என்பவரும் மின்னூர் பகுதியிலுள்ள ஒரு தனியார் கல் குவாரியில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் சமூகவலைத்தளங்களில் வரும் தகவலை நம்பி, செங்காந்தள் பூ செடியின் கிழங்கை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் பெறும் என அதை சாப்பிட்டுள்ளனர். இதையடுத்து அதை சாப்பிட்டதும் இருவருக்கும் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். […]
