மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக நடப்பட்ட செங்கலை திமுக சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின் திருடிவிட்டதாக புதுக்கோட்டை பாஜகவினர் உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்ற பாஜகவினர், உதயநிதி ஸ்டாலின் மீது புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்ட செங்கலை உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்திற்கு கொண்டு வந்து பயன்படுத்தினார். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நேற்று நடைபெற்ற […]
