செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதியில் திமுக 5 முறையும், அதிமுக 4 முறையும் வென்றுள்ளன. பாமக 2 முறையும் தேமுதிக 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன. தற்போதைய எம்எல்ஏ திமுகவின் வரலட்சுமி. செங்கல்பட்டு தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 4,26,535 ஆகும். பாதாளசாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும் என்ற அரசு அரசின் அறிவிப்பு பல ஆண்டுகளாக வெற்று அறிவிப்பாகவே உள்ளது என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை தேவை என்பது மக்களின் வேண்டுகோளாக உள்ளது. […]
