செங்கம் என்ற இடத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 22 தேதி நடைபெற்ற திருமணத்தில் கலந்துகொண்ட உறவினர் இரண்டு பேர் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. திருமணத்தில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. ஆனாலும் பல திருமணங்கள் கட்டுப்பாடுகளை மீறி கூட்டம் கூடி நடத்துகின்றனர். […]
