தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் விரைவில் காலியாகிறது. புதிய மாநிலங்களை உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகின்ற ஜூன் 10ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வருகின்ற 24ஆம் தேதி தொடங்க உள்ளது. தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தமிழக சட்டப்பேரவையில் உள்ள எம்எல்ஏக்களின் பலத்தின் அடிப்படையில் திமுகவிற்கு 4 இடங்களும், எதிர்க்கட்சியான அதிமுகவிற்கு 2 இடங்களும் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. […]
