சென்னை சூளைமேடு பகுதியில் வாடகை கேட்டதால் வீட்டு உரிமையாளர்களை வாடகைதாரர் கத்தியால் குத்தியதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், இருவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை சூளைமேடு அருகே ராதாகிருஷ்ணன் இரண்டாவது தெருவில் சந்திரமோகன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் பெயிண்டர் வேலை பார்த்துவரும் நாராயணன் என்பவர் இரண்டு மகன்களுடன் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வருகிறார். கொரோனா கால ஊரடங்கு காரணமாக வேலை இல்லாததால் கடந்த ஐந்து மாத வாடகை பாக்கியை நாராயணன் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. […]
