தேனி மாவட்டத்தில் மயிலாடும்பாறை ஊராட்சி மன்ற தலைவராக பார்வதி அன்பில் சுந்தரம் இருந்து வருகிறார். இந்நிலையில் தீபாவளி பண்டிகை அன்று இரவு மர்ம கும்பல் ஒன்று ஊராட்சி மன்ற அலுவலர் கதவை உடைத்து உள்ளே புகுந்து மேசை நாற்காலி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதனை அடுத்து நேற்று காலை வழக்கம் போல் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பார்வதி அன்பில் சுந்தரம் சென்றுள்ளார். அப்போது அவர் அலுவலகத்தின் பூட்டு […]
