ஏற்காட்டில் பெய்த மழையின் காரணமாக மின் கம்பங்கள் சரிந்து விழுந்ததில் 24 மணி நேரமும் மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர். தமிழகத்தில் சில மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ஏற்காட்டில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. மழை காரணமாக ஆங்காங்கே மரக்கிளைகள், மின்கம்பங்கள் முறிந்து சாலையில் விழுந்து கிடந்தன. ஏற்காடு ரவுண்டானா பகுதியில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததில் 2 மின் கம்பங்கள் சாலையில் […]
