சுவிட்சர்லாந்தின் சூரிச் விமானநிலையத்தில் 73 வயது பெண்மணியிடம் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சூரிச் விமான நிலையத்தில் சோதனை பணியில் இருந்த காவல்துறையினர், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த 73 வயது பெண்மணி மீது சந்தேகம் அடைந்துள்ளனர். எனவே, அவரிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவரிடம், 4 கிலோ அளவிலான கோகோயின் போதை பொருள் இருந்ததை பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அந்த பெண்மணி, Sao Paulo என்ற பகுதியிலிருந்து, சூரிச் வழியே ஆம்ஸ்டர்டாம் பகுதிக்கு […]
