சூரி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவிட்டுள்ளது. பிரபல நடிகரான சூரியிடம் நிலம் வாங்கி தருவதாக பணம் மோசடி செய்யப்பட்டது குறித்த வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி இந்த விசாரணை நடைபெற்று வருகின்றது. ஏற்கனவே இவ்வழக்கு தொடர்பாக ஓய்வு பெற்ற போலீஸ் டிஜிபி ரமேஷ் கொடவாலா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இந்த வழக்கு தொடர்பாக சூரி ஏற்கனவே மூன்று முறை ஆஜராகி விளக்கமளித்த நிலையில் அண்மையில் […]
