திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் நிகழ்வில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மதுரை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வாக சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்த விழா வரும் ஒன்பதாம் தேதி நடைபெற உள்ளது. அசுரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்வு நடைபெறும் ஒன்பதாம் தேதி அன்று பிற்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் எனவும், அதன் […]
