சீனாவில் பன்றி இறைச்சி சூப்பில் வவ்வால் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் ஹூபெய் மாகாணத்தில் சென் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். குடும்பத்தில் உள்ள நபர்கள் சென்ற பத்தாம் தேதி அருகில் இருக்கின்ற உணவகம் ஒன்றில் பன்றி இறைச்சி சூப் ஆர்டர் செய்திருக்கின்றனர். பின்னர் சூப் வந்ததும் சென்னின் அம்மா சூப் பாத்திரத்தை திறந்து பார்த்தபோது கருப்பாக ஒரு பொருள் கிடந்துள்ளது. அதனை நறுமணத்திற்காக சேர்க்கப்பட்ட வாசனைப் பொருள் எனக் கருதி சூப்பை குடிக்க தொடங்கியுள்ளனர். […]
