குற்றங்கள் அதிகரிக்கும் பகுதிகளில் 120 கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்த மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி உத்தரவிட்டுள்ளார். தேனி மாவட்டங்களில் தொடர்ந்து கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றங்கள் அதிகரித்து வருவதால் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த கோரிக்கையின் அடிப்படையில் மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி பிரவீன் உமேஷ் டோங்கரே விசாரணை நடத்தி மாவட்டத்தில் குற்றங்கள் அதிகரிக்கும் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த […]
