அமெரிக்காவில் சூப்பர்மார்கெட் ஒன்றில் திடீரென்று நுழைந்த மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 10 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலுள்ள கொலராடோ மாகாணத்தில் Boulder என்ற பகுதியில் அமைந்துள்ள King Soopers என்ற சூப்பர் மார்க்கெட்டில் கடந்த திங்கட்கிழமை அன்று மர்மநபர் ஒருவர் துப்பாக்கியுடன் வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து திடீரென்று அந்த நபர் கடையிலிருந்த மக்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இக்கொடூர சம்பவத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் உட்பட பத்து நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். […]
