சூப்பர் சிங்கர் பிரபலம் மாளவிகாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மாளவிகா. இதைத் தொடர்ந்து இவர் ஹிந்தியில் ஒரு பாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். அதில் இறுதிச்சுற்று வரை வந்த மாளவிகா வெற்றிபெறவில்லை . இந்நிலையில் மாளவிகா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார். […]
