திருச்சி பறவைகள் சாலையில் உள்ள வாசவி மஹாலில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு “பெருமாள் தரிசனம் நிகழ்ச்சி” என்கின்ற தலைப்பில் 108 திவ்ய தேசங்களில் காட்சி தரும் பெருமாள்களை ஒரே இடத்தில் பார்க்கும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக நகராட்சி நிர்வாகத்துறையில் அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி இதனை துவக்கி வைத்தார். திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், ஸ்ரீ ரங்க ரங்கநாதர் கோவில் சுந்தர் பட்டம் ஆகியோர்கள் இதில் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து 108 பெருமாள்கள் […]
