சிறுவன் ஒருவனின் சடலம் சூட்கேசுக்குள் வைக்கப்பட்டு டெல்லியில் ஒரு பகுதியில் கிடந்துள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ள ரோஹினி என்ற பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் கடந்த 2 நாட்களுக்கு முன் திடீரென மாயமாகி உள்ளான். இதையடுத்து அவனது பெற்றோர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதற்கிடையே நேற்று காலை மன்கோல்புரி என்ற பகுதியில் உள்ள பீர் பாபா பஜார் பகுதியில் சூட்கேஸ் ஒன்று சந்தேகப்படும்படியாக கேட்பாரற்று கிடந்துள்ளது. […]
